நான்காவது தவணை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்! தொடங்கிய முன்பதிவு!!

0
131

நான்காவது தவணை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்! தொடங்கிய முன்பதிவு!!

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு முதன்முதலாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பின் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் இந்த கொரோனா பரவலின் பாதிப்பை கட்டுபடுத்த முடியாமல் தவித்தன.

இதையடுத்து, கொரோனாவை கட்டுபடுத்தும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் பலக்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வந்தன. அதன் பலனாக கொரோனாவை எதிர்த்து போராடக்கூடிய வகையில் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன. அதன்பிறகு உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி உள்ள அனைவருக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

எனவே கொரோனா பரவலை கட்டுபடுத்த உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு எதிராக செயல்படக்கூடிய, கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகின்றன. முதற்கட்டமாக இந்த வகை தடுப்பூசிகள் இரண்டு கட்டமாக செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இங்கிலாந்திலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இங்கிலாந்தில் இந்த கொரோனாவின் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. இதன் காரணமாக அந்த நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி மிகத் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தில் 16 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தற்போது மூன்றாவது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்காவது தவணையாக ‘ஸ்பிரிங் பூஸ்டர்’ என்னும் தடுப்பூசி செலுத்த இருப்பதாக அந்நாட்டின், “தடுப்பூசி மற்றும் நோய்த் தடுப்புக்கான கூட்டு குழு தெரிவித்தது.”

அதன்படி, கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், 75 வயது அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களுக்கு நான்காவது தவணையாக இந்த ‘ஸ்பிரிங் பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் இங்கிலாந்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.