சிவகுமார் வீட்டு விசேஷத்திற்கு அழைக்காமல் வந்த ஜெய்சங்கர் நட்பை பாராட்டிய தருணம்.
எம்ஜிஆர் சிவாஜிக்கு பிறகு மிகச் சிறந்த நட்பில் இருந்தவர்கள் ஜெய்சங்கர் மற்றும் சிவக்குமார். சிவகுமாரன் ஜெய்சங்கரும் தங்களுடைய நல்ல நடிப்பின் மூலம் மக்களது மனதை கவர்ந்தார்கள் என்றே சொல்லலாம் அவர்களுக்கு இருந்த அழகும் பெண்களை ஈர்க்கச் செய்தது.
இவர்களுக்கு அடுத்தபடி சிவகுமார் ஜெய்சங்கரும் நல்ல பெயரை பெற்றிருந்தார்கள். அதேபோல் இருவருக்கும் நட்பும் அதிகமாக இருந்தது.
சண்டை காட்சிகள் பிடித்த போன ஜெய்சங்கர் கௌபாய் போன்ற வேடங்களில் நடிக்க ஆரம்பத்தார்.சிவக்குமார் தொடர்ந்து குடும்ப பாங்கான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருந்தார்.
பல வருடங்கள் கடந்ததும் இருவருக்கும் இடையே ஆன நட்பு கொஞ்சம் தள்ளி இருந்தது. அந்த நேரத்தில் தனக்கு திருமணம் முடிந்து 25 ஆண்டு நிறைவு ஆனதை கொண்டாட விரும்பினார் சிவக்குமார்.
ஆக அனைத்து திரை துறை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும் பத்திரிக்கை வைத்திருந்தார் சிவக்குமார். ஆனால் ஜெய்சங்கருக்கு வைக்க மறந்துவிட்டார். வரமாட்டார் என்று நினைத்து வைக்கவில்லையோ என தெரியவில்லை ஆனால் அவருக்கு அழைப்பு போகவில்லை.
ஒரு கட்டத்தில் இந்த மாதிரியான விழா நடக்கப் போகிறது என்று ஜெய்சங்கர் காதுக்கு போகவே அழையா விருந்தாளியாக அந்த விசேஷத்திற்கு சென்றுள்ளார்.
உண்மையிலேயே ஜெய்சங்கர் விசேஷத்திற்கு வரமாட்டார் என்று நினைத்தது தான் சிவக்குமார் பத்திரிக்கையை வைக்க வில்லையாம். ஆனால் அழையா விருந்தாளியாக வந்து நட்பை பாராட்டிய பொழுது சிவக்குமார் நெகிழ்ந்துவிட்டாராம்.
இதுப்பற்றி தான் எழுதிய புத்தகங்களில் கூட எழுதி இருக்கிறாராம் சிவகுமார்.