Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கல்வி கடனை வாங்குபவரா நீங்கள்.. அப்போ இன்ஷூரன்ஸ் செய்வது அவசியம்.. காரணம் என்ன?

தற்போதுள்ள காலகட்டத்தில் கல்வி அவசியமான ஒன்றாகிறது. மேல்நிலைகல்வி மட்டுமின்றி உயர்கல்வி பயிலவும் பல மாணவர்கள் வெளிநாடுகளில் அல்லது பெரிய கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். ஆனால், சிலருக்கு அதற்கான பொருளாதாரம் இல்லாமல் இருக்கும்.அதற்காக வங்கிகள் கல்வி கடன் தருகின்றன.

வெளிநாடுகளில் பயிலும் பலரும் பெரும்பாலானோர் கல்விகடனை பெறுகின்றனர். மாணவர்கள் கடன்பெரும் போது அவர்களின் பெற்றோர் இணை விண்ணப்பதாரராக இருப்பர்.இந்த வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாத நிலையில், துரிதஷ்டவசமாக ஏதேனும் நடந்தால் கடன் சுமை மாணவர்களின் பெற்றோர் மேலே வீழுந்து விடுகிறது.

இதற்காக கல்வி கடனுக்கு இன்ஷீரன்ஸ் செய்து வைத்திருப்பதை அவசியமாகிறது என இந்தியாவின் முதல் எஜூகேஷன் ஃபினான்ஸிங் மார்க்கெட்பிளேஸான GyanDhan-ன் நிறுவனர் அங்கித் மெஹ்ரா தெரிவித்துள்ளார். கல்வி கடனுக்கான இன்ஷீரன்ஸூக்கான முக்கியத்துவம் குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

சில நேரங்களில் மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் கடன் தொகையை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம். சில நேரங்களில் மாணவர் கடும் காயமடைந்து சிகிச்சையில் இருந்தால் இன்ஷீரன்ஸ் நிறுவனம் முழு கல்வி கடன் பொறுப்பையும் ஏற்றுக்கும்.

என்னென்ன பலன்கள் கிடைக்கும் :

இன்ஷூரன்ஸ்கள் வகைகள் :

மாணவர்களுக்கான இன்ஷீரன்ஸ் செய்யும் போது ஹெல்த் இன்ஷுரன்ஸ், எஜூகேஷன் லோன் இன்ஷூரன்ஸ், ஸ்டூடன்ட் ட்ராவல் இன்ஷுரன்ஸ் இந்த வகையான இன்ஷூரன்ஸ் செய்யலாம்.

இன்ஷூரன்ஸ் நிறுவனம் எப்போது பொறுப்பேற்கும் :

சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கல்வி கடன் பெற்றவர்கள் குணப்படுத்தவே முடியாத நோயால் பாதிக்கப்படும் சமயங்களில் அல்லது மரணிக்கும் நேரத்தில் திரும்ப செலுத்தும் சில நிறுவங்கள் வேலை இழந்தாலும் அவை கடனை திரும்ப செலுத்தும்.

Exit mobile version