சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு காப்பீட்டு திட்டம்! திருவாங்கூர் தேவஸ்தானம் அசத்தல் அறிவிப்பு! 

0
211
Insurance scheme for devotees going to Sabarimala! Travancore Devasthanam Awesome Announcement!
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு காப்பீட்டு திட்டம்! திருவாங்கூர் தேவஸ்தானம் அசத்தல் அறிவிப்பு!
சபரிமலைக்கு ஐயப்பனை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு காப்பீட்டு திட்டம் வழங்கப்படும் என்று திருவாங்கூர் தேவஸ்தானம் தற்பொழுது அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது.
உலக அளவில் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் கேரளா மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சபரிமலையில் உள்ள ஐயப்பனை தரிசனம் செய்ய வருடம் முழுவதும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
சபரிமலை என்று சொன்னாலே மண்டல பூஜையும் மகரவிளக்கும் தான் நியாபகத்திற்கு வரும். அப்பொழுது மட்டுமில்லாமல் ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் ஒரு சில நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்திருக்கும். நவம்பர் மாதம் துவக்கத்தில் இருந்து ஜனவரி மாதம் முடியும் வரை சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதும்.
ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் ஆன்லைன் புக்கிங் போன்று பல்வேறு நடைமுறைகள் கொண்டுவரப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாங்கூர் தேவஸ்தானம் சபரிமைக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு காப்பீட்டு திட்டம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அதாவது கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் அவர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சபரிமலையில் மேம்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள், பக்தர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நலத்திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள் செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு காப்பீட்டு திட்டம் வழங்கப்படும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த திருவாங்கூர் தேவஸ்தானம் தலைவர் பிரசாந்த் அவர்கள் “சபரிமலைக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கோயிலின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விபத்து நடந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் காப்பீடு திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த காப்பீட்டு திட்டத்திற்காக சபரிமலைக்கு தரிசனம் செய்ய முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் இருந்து 10 ரூபாய் வசூல் செய்யப்படும்” என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய தேவஸ்தான தலைவர் பிரசாந்த் அவர்கள் “இதற்காக விரைவில் காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்படும். இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். சீசன் தினங்களில் தினசரி 80000 பக்தர்களும் சாதாரண நாட்களில் தினசரி 50000 பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு இந்த காப்பீட்டுத் திட்டம் மிகவும் பயன் தரும் திட்டமாக இருக்கும்” என்றும் கூறினார்.