Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இலங்கையில் தீவிரமடையும் மக்கள் போராட்டம்! பதவியை தூக்கி எறிந்தார் இலங்கை அதிபர்!

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக அதிபர் கொத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள் இதற்கு நடுவே நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான மக்கள் இலங்கை அதிபர் மாளிகையின் முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இந்தப் போராட்டம் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், தன்னுடைய பதவியை பிரதமர் ரனில் விக்கிரமசிங்க நேற்று ராஜினாமா செய்தார். அதோடு 2 அமைச்சர்களும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்த போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது என்பதை அறிந்து கொண்ட இலங்கையின் அதிபர் பதவியை கோத்தபாய ராஜபக்சே வருகின்ற 13ஆம் தேதி அதாவது நாளை மறுதினம் ராஜினாமா செய்வார் என நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

இப்படியான நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்பே அறிவித்திருந்தது. போல பதவியிலிருந்து விலகுகிறேன் என்று பிரதமர் ரனில் விக்ரமசிங்கவிடம் அதிகாரப்பூர்வமான முறையில் தெரிவித்திருக்கிறார். இதனை இலங்கை பிரதமர் அலுவலகம் இன்று உறுதி செய்திருக்கிறது.

அதனடிப்படையில் கொதபய ராஜபக்சே வருகின்ற 13ஆம் தேதி அதிபர் பதவியிலிருந்து விலகுகிறார் என்று சொல்லப்படுகிறது. இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பதவி விலகுவது தொடர்பாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவிக்கும்போது அனைத்து கட்சி அரசு அமைக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்ற பின்பு விக்கிரமசிங்கே பதவி விலகுவார் என கூறியிருந்தது. அதுவரையில் விக்கிரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்றும் பிரதமர் அலுவலகம் கூறி இருக்கிறது.

Exit mobile version