Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் இரண்டாவது நாளாக  தீவிர விசாரணை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் இரண்டாவது நாளாக  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.  சிவசங்கரனிடம் நடந்து வரும் விசாரணையில் கடத்தல் கும்பலுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தன்னிடம் ஸ்வப்னா சுரேஷ் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும் கடத்தல் கும்பல் என தெரிந்திருந்தால் அவர்களுடனான தொடர்பை துண்டித்திருப்பேன் என சிவசங்கரன் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று நடந்து வரும் விசாரணையை தொடர்ந்து சிவசங்கரன் கைதாவாரா? அல்லது தொடர் விசாரணையில் இருந்து விடுவிக்கப்படுவாரா? என தெரியவரும்

Exit mobile version