கலைஞர் உரிமை திட்டத்தில் வட்டி வர போகிறதா? குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி!!

0
291
Magalir Urimai Thogai Scheme

கலைஞர் உரிமை திட்டத்தில் வட்டி வர போகிறதா? குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி!!

அன்றாட வீட்டில் பல வேலைகள் செய்து கஷ்டப்படும் பெண்களின் உழைப்பை போற்றும் விதமாக தமிழக அரசு ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது,இந்த திட்டம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பெயரால்,குடும்ப தலைவிகள் அனைவருக்கும் அவர்களது வங்கி கணக்கில் மாதம் ரூபாய் 1000 செலுத்தப்படுகிறது.

இதன்மூலம் மகளிர் தங்களின் பொருளாதார வாழ்வு மிகவும் மேம்பட்டுள்ளது எனவும் மேலும் சமூகத்தில் எங்களது உழைப்பிற்கு சரியான அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த திட்டம் ஒரு சில பெண்களுக்கு கிடைக்கவில்லை என புகார் எழுந்தது.

அதனை சரிசெய்யும் நோக்கில் திட்டத்தில் பயன் பெற முடியாத நிலையில் இருந்த அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கும்,புதிதாக திருமணம் ஆன பெண்களும் பயன் பெற மீண்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கலைஞர் உரிமை தொகை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதனால் இன்னும் பல பெண்கள் பயனர்களாக சேர போகிறார்கள்.

தற்போது இதனை இன்னும் விரிவுபடுத்தும் நோக்கில் அரசு புது திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.அதாவது மாதம் ரூபாய் 1000 பெறுவதை அரசு சொல்லும் ஒரு சில வங்கிகளில் சேமித்து வந்தால் அதற்கான வட்டி சதவீதம் 7.5 என்ற அளவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையரசி தொடர் வைப்புத் திட்டம் என்னும் இந்த திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் வரை நம்மால் பணம் சேமிக்க முடியம்.இது இல்லத்தரசிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது