Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அயன் படத்தில் சூர்யா இந்த கெட்டப்பில் வருவதற்கு இந்த நடிகை தான் காரணமா?

Ayan movie

#image_title

Ayan movie: இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் அயன். இந்த திரைப்படம் 2009 ஆம் ஆண்டு  வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. சூர்யாவிற்கு இந்த படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்றே கூறலாம். அந்த அளவிற்கு ஆக்ஷன் படமாக வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் கூறவேண்டும். இந்த படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் பிரபு, கருணாஸ், ஜகன், ஆகாஷ்தீப் சைகல் ஆகியோர் நடித்திருப்பார்கள்.

போதைப்பொருள் கடத்தலை மையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ரூ.80 கோடி வசூல் செய்தது. பொதுவாக ஒரு சில இயக்குநர்கள் தாங்கள் எடுக்கும் படங்களுக்கு சென்டிமென்டாக (Ayan Movie Interesting Facts in Tamil) சில காட்சிகளை படத்தில் வைப்பார்கள். அது அவர்களின் முந்தைய படத்தின் வெற்றியாகவும் இருந்ததற்கான காரணமாக இருக்கும். அந்த வகையில் இயக்குநர் கே.வி.ஆனந்த் அவர் எடுக்கும் படங்களில் அவர் முன்பு எடுத்த படங்கள் அல்லது அவர் வேலை பார்த்த படங்களின் காட்சிகள் அல்லது குறிப்புகளை பயன்படுத்துவார்.

அந்த வகையில் தான் அயன் படத்தில் ஒரு பாடலுக்கு நடிகர் சூர்யா பல கெட்டப்பில் வருவார். அந்த கெட்டப்பில் காக்க காக்க, பேரழகன், கஜினி, வாரணம் ஆயிரம், போன்ற சூர்யா நடித்த பல கெட்டப்புகள் அதில் காண்பிக்கப்படும். அந்த வகையில் சூர்யா அந்த காட்சியில் லேடி கெட்டப்பில் வருவார். அந்த கெட்டபை பார்த்த பலரும் இதற்கு முன் நடிகர் சூர்யாவை அந்த கெட்டப்பில் பார்த்தது இல்லை, இது யார் கெட்டப் என்று தோன்றிருக்கும். அந்த கெட்டப் சிவாஜி படத்தில் “ஸ்டைல்” பாடலுக்கு நடிகர் ரஜினியுடன் நடிகை ஸ்ரேயா ஆடியிருப்பார். அந்த கெட்டப் தான் அயன் படத்தில் சூர்யா வரும் காட்சி.

Ayan Movie

அவரின் கெட்டப் ஏன் அயன் படத்தில் வைக்கப்பட்டது என்றால், சிவாஜி படத்தில் கே.வி. ஆனந்த் சினிமாட்டோகிராப் பராக பணியாற்றியிருப்பார். அதனை வைத்துதான் இயக்குநர் கே.வி. ஆனந்த் அந்த காட்சியை காட்டிருப்பார்.

மேலும் படிக்க: Bigg boss Archana: ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. அர்ச்சனாவின் காதலர் இவரா?

Exit mobile version