Vavval facts: ஆமா..! வெளவால்கள் ஏன் தலைகீழாக தொங்குகிறது?

0
369
#image_title

Vavval facts: இந்த அழகான பூமியில் அனைத்து வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. சூரிய குடும்பத்தில் உயிர்கள் வாழக்கூடிய கோள் என்றால் அது பூமி தான். இப்படிப்பட்ட அழகான பூமியில் பறவைகள், விலங்குகள், பூச்சிகள், ஊர்வன போன்ற உயிர்கள் மற்றும் பல வகையான உயிர்கள் இருக்கின்றன.

உதாரணமாக பறவை இனங்களை எடுத்துக் கொண்டால் லட்சக்கணக்கான இனங்கள் மட்டும் பறவையில் இருக்கிறது. இதில் ஒவ்வொரு கண்டங்களுக்கும், அதன் வெப்பநிலைக்கு ஏற்றவாறு பல்வேறு வகையான பறவைகள் அதிகமாக வாழ்ந்து வருகிறது.

அப்படிப்பட்ட பறவை இனங்களில் ஒன்றுதான் இந்த வெளவால் (Bat). ஆனால் மற்ற பறவைகள் இதனை ஒரு பறவையாகவே கருதுவதில்லை. இதற்கு காரணம் குட்டி போட்டு பால் கொடுக்கும் முதுகெலும்பு உள்ள ஒரே பறவையினம் வெளவால் தான். வெளவால்கள் எப்பொழுதும் இரவு நேரங்களில் மட்டுமே வேட்டையாடுகிறது. இதற்கு சில காரணங்கள் உண்டு.

வெளவால்கள் கண்கள் இருந்தும் பார்ப்பதில்லை. தங்களுக்கு தேவையான இறையை இரவு நேரங்களில் மட்டுமே வேட்டையாடுகிறது. வெளவால்கள் பறக்கும் போது குறிப்பிட்ட தூரத்தில் பொருட்களின் மீது மோதாமல் இருக்க மீயொலியை பயன்படுத்தி அந்த பொருளின் தூரத்தை துல்லியமாக கண்டறிந்து மோதாமல் பறந்து செல்கிறது.

இது பூச்சிகள், இறந்த விலங்குகளின் மாமிசம் போன்றவற்றை இது உண்ணுகிறது. இதன் தோற்றம் பார்ப்பதற்கு எலி போன்றும் ஒரு எலிக்கு இறகுகள் முளைத்தால் எப்படி இருக்குமோ அதுபோல இந்த வெளவால்களின் தோற்றம் காணப்படும். சில சமயங்களில் வௌவால்களின் முகத்தை உற்று நோக்கும் பொழுது நரி போன்ற முக அமைப்புடனும் இது காணப்படும். எலிக்கு இறக்கை முளைத்து பறந்தால் எவ்வாறு இருக்குமோ அது போன்று தான் காணப்படும் இந்த வெளவால்கள்.

வௌவால்கள் இந்த உலகில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவைகள் காணப்பட்டாலும், 20% மட்டுமே பாலூட்டிகளாக கருதப்படுகின்றன. அதிகமாக நாம் கேள்விப்பட்டிருக்கும் வெளவால்களில் பழந்தின்னி வௌவால்கள் என்ற ஒரு இனமுண்டு. இவைகள் விரைவில் நீண்ட தூரம் பயணித்து பழங்களில் உள்ள சாருகளை மட்டுமே உண்டு இவைகள் வாழுகின்றன.

அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும் குறிப்பிட்ட சில வகை வௌவால் மட்டும் காடுகளில் வாழும் விலங்குகள், மாடுகள் போன்றவற்றின் ரத்தங்களை உறிந்து வாழுகின்றன. இதுபோன்ற பல்வேறு இனங்களைக் கொண்ட இந்த வௌவால்கள் முதுகெலும்பு உள்ள பாலூட்டி பறவையாக கருதப்படுகிறது.

சில சமயங்களில் வௌவால்களை ஆன்மீக ரீதியாகவும் பார்ப்பார்கள். பொதுவாக ஒரு பேய் படம் போன்றவற்றை பார்க்கும் பொழுது ஒரு அடர்ந்த இருட்டிலிருந்து வெளிவரக்கூடிய பறவையாக வௌவால்கள் (Bat facts in tamil) காண்பிப்பது வழக்கம் தான். ஒரு சிலருக்கும் இங்கு சந்தேகம் ஏற்படும். வௌவால்கள் ஏன் எப்பொழுதும் தலைகீழாகவே தொங்கிக்கொண்டு இருக்கின்றன என்று. அதற்கு காரணம் வௌவாலின் உடல் எடையை தாங்கும் அளவிற்கு அதன் கால்களில் வலு இருக்காது. எனவே வௌவால்கள் தலைகீழாக தொங்கும் பொழுது அதன் இறகுகளை அடித்தவாறு அது எளிதாக பறந்து செல்கிறது. இதுவே அது தரையில் கால்களால் நிற்கும் பொழுது அதனுடைய முழு எடையும் தூக்கிக் கொண்டு அதனால் பறக்க இயலாது. எனவேதான் வௌவால்கள் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க: ஓ இதான் விஷயமா? பாம்பின் விஷத்தில் இருந்து கீரி தப்பிக்க காரணம் இதுவா?