Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா பற்றி சுவாரிசியமான தகவல்

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. கொரோனா குறித்த ஆய்வுகளும் வேகமெடுத்து வருகின்றன. குறிப்பாக வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு, எந்த வயதினர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்? எந்தெந்த நோயாளிகள் வைரசின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாண்டு விடுகிறார்கள்? என்பது போன்ற ஆய்வுகள் உலகம் முழுவதும் தீவிரமாக நடக்கின்றன. இந்த வரிசையில் கொரோனாவுக்கு குழந்தைகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள்? அவர்களது உடலில் கொரோனாவின் வாழ்நாள் எவ்வளவு காலம்? அது ஏற்படுத்தும் அறிகுறிகள்? என்பது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, குழந்தைகளின் உடலில் எவ்வளவு நாட்கள் கொரோனா வைரஸ் இருக்கிறது? என்பதை கண்டறிவதற்காக குழந்தைகள் அனைவருக்கும் சராசரியாக 3 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக ஜார்ஜ் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ராபர்ட்டா எல்.தெபியாசி உள்ளிட்ட நிபுணர்கள் கூறுகையில், ‘கொரோனா பரவலில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிக்கலாம். ஏனெனில் அறிகுறி இல்லாமலோ, அறிகுறிகள் அனைத்தும் குணமடைந்த பின்னரோ, குழந்தைகளிடம் எதிர்பார்க்காத வகையில் நீண்ட காலத்துக்கு வைரஸ் மரபணுக்கள் இருக்கின்றன’ என்று தெரிவித்துள்ளனர்.

Exit mobile version