Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பத்மினி இதை செய்ய வேண்டும் என அடம் பிடித்த MGR!

#image_title

இன்றைய காலத்தில் எத்தனையோ ஜோடிகள் இருந்தாலும், சாவித்திரி ஜெமினி கணேசன் என்று போற்றப்பட்ட பிறகு சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி என்று தான் பலர் கூறியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களது காமினேஷன் மிகவும் மக்களுக்கு பிடித்த போனது.அது போல் அவர்களுக்குள் காதலும் இருந்தது என்று சொல்லப்பட்டாலும் அது பத்மினியின் பெற்றோர்களுக்கு அதில் விருப்பம் இல்லாததால் அது நிறைவேறாமல் போனது.

 

இப்படி ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது அதைப்பற்றி தான் இப்பொழுது நாம் விவரிக்க போகின்றோம்.

 

பத்மினி கல்பனா என்ற இந்தி படத்தின் மூலம் திரையு உலகிற்கு அறிமுகமானவர். அவரின் நாட்டியத்திற்கு ஈடு இணையே இன்றளவும் கிடையாது என்று போற்றப்பட கூடிய அளவிற்கு அவரது முகபாவனையும் நாட்டியமும் அனைவரையும் ஈர்க்கச் செய்தது என்றே கூறலாம்.

 

என்னதான் சிவாஜி கணேசன் பல பெண்களுடன் பல நடிகைகளுடன் நடித்திருந்தாலும் பத்மினி சிவாஜி கணேசன் என்றாலே அதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கும். நடிப்பில் மக்களை மூழ்கச் செய்து விடுவார்கள்.

 

எதிர்பாராதது, தேனும் பாலும், அமர தீபம், மங்கையர் திலகம், தெய்வப்பிறவி, பணம், மரகதம், இரு மலர்கள், திருமாள் பெருமை, படங்கள் சிவாஜி கணேசனும் பத்மினியும் இணைந்து நடித்துள்ளார்கள்.

 

படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான சம்பவத்தை பற்றி தான் இது.

 

சிவாஜி கணேசனும் பத்மினியும் எதிர்பாராதது என்ற படப்பிடிப்பில் இருந்த பொழுது  பத்மினி சிவாஜி கணேசனை அரைய வேண்டும். அப்படி அரையும் ஒரு சீன் இருந்ததாம். பத்மினி சிவாஜி கணேசனை அறைய மறுத்துவிட்டாராம்.

 

சிவாஜி கணேசன் எப்படியோ பத்மினியை சம்மதிக்க வைத்து விட்டாராம்.  அந்த காட்சியில் நடிக்கும் பொழுது. டேக் என சொன்னதும் ஓங்கி பளார் என்று ஒரு அரை விட்டிருக்கிறார் சிவாஜி கணேசனை பத்மினி, ஓங்கி அடித்த அடியில் சிவாஜி கணேசனுக்கு ஒரு நிமிடம் கதி கலங்கிவிட்டதாம்.

 

பிறகு மூன்று நாள் காய்ச்சலில் படுக்கையாக படுத்து விட்டாராம் சிவாஜி கணேசன். தன்னால் தான் இப்படி ஆனது என  மிகவும் கலக்கமுற்ற பத்மினி அவரது வீட்டிற்கே சென்று நேரடியாக சிவாஜி கணேசன் பார்த்து வந்துள்ளார். தான் அடித்ததால் தான் இப்படி ஆனது என்ற மிகவும் மனம் கலக்கம் கொண்டு நேரடியாக போய் பார்த்து வந்திருக்கிறார் மேலும் அது மட்டுமில்லாமல் அவருக்கு ஒரு கார் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார் பத்மினி.

 

இந்த செய்தி திரையுலகில் அனைவரிடமும் பரவி போக அதுவும் ஒரு பேசும் பொருளாக அந்த காலத்தில் இருந்துள்ளது.  அதன் பிறகு எம்ஜிஆர் உடன் ஒரு படத்தில் நடிக்க பத்மினி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தாராம். அந்த இயக்குனரிடம்  எம்ஜிஆர் சொன்னாராம் எனக்கும் பத்மினி அரையும்  வகையில் ஒரு சீன் வேண்டும். அப்பொழுது தான் எனக்கும் கார் கிடைக்கும் என்று நகைச்சுவையாக சொன்னாராம் இயக்குனரிடம் எம்ஜிஆர்.

Exit mobile version