Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடும் சிக்கலில் கர்ணன்! நடிகர் தனுஷுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

Interim ban on Karnan movie! Fans in grief!

Interim ban on Karnan movie! Fans in grief!

கர்ணன் படத்திற்கு இடைக்கால தடை! சோகத்தில் ரசிகர்கள்!

நடிகர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி வெளிவர இருக்கிறது.இந்த படத்தை அவர்களது ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலானது குறிப்பிட்ட சாதியினை இழிவுப்படுத்துவதாக கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பின் இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தது,அப்போது திரைப்படத் தணிக்கைத்துறை மண்டல அலுவலர் மற்றும் இயக்குனரான மாறி செல்வராஜ்,பாடலை வெளியிட்ட திங்க் மியூசிக் இந்திய யூடியூப் சேனலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

தற்போது பாடலை நீக்காமல் படத்தை வெளியிடக்கூடாது என இடைக்காலத்தடை கோரி  உச்சநீதிமன்றத்தில் வழக்கு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கர்ணன் நடித்த தனுஷ், பண்டாரத்தி பாடலை பாடிய தேவா, பாடலாசிரியர் யுகபாரதி என அனைவருக்கும் உயர்நீதிமன்றக்கிளை நோட்டீஸ் அனுபியுள்ளது. இதனால்  கர்ணன் படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version