Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இளம் நடிகைக்கு மாறி மாறி வந்த பாலியல் மிரட்டல்!

Intermittent sexual harassment of a young actress!

Intermittent sexual harassment of a young actress!

இளம் நடிகைக்கு மாறி மாறி வந்த பாலியல் மிரட்டல்!

நடிகைகள் பலரும் சமூக இணையதளத்தை பின்பற்றி வருகின்றனர். அதன் மூலம் அவர்களது ரசிகர்களுக்காக தங்களது பின்னணியை தெரிவிக்கவும். தங்களது புதிதாக எடுத்த புகைப்படங்களை அதன்மூலம் பகிரவும், சமூக வலைத்தளங்களை பெரும்பான்மையோர் பயன்படுத்துகின்றனர். நடிகர், நடிகைகள் என்று இல்லாமல் பொது மக்களும் கூட இதை செய்கின்றனர்.

இந்நிலையில் நடிகைகளுக்கு சில சமூகவலைத்தளங்கள் மூலம் மர்ம நபர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளது. தற்போது இன்னொரு நடிகையும் இந்த தொல்லையில் சிக்கி உள்ளார். அவரது பெயர் பிரதியுஷா பால். இவர் வங்க மொழிப் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து கொண்டு உள்ளார்.

பிரதியூஷா பாலுக்கு சில விஷமிகள் சமூக வலைத்தளங்களின்  மூலம் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாச இணைய தளங்களிலும் பதிவேற்றி உள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியான பிரதியுஷா கொல்கத்தா சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது எனக்கு ஒரு வருட காலமாகவே சமூக வலைத்தளத்தின் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் வந்தன.

தொல்லை கொடுத்த நபர்களின் நம்பரை நான் ப்ளாக் செய்ததன் காரணமாக, மறு நாள் வேறு ஒரு ஐடியில் இருந்தும் அதை அந்த நபர்கள் தொடங்கினர். ஆரம்பத்தில் நான் இதை கண்டு கொள்ளாமல் இருந்ததன் காரணமாக, தற்போது எனது புகைப்படங்களை ஆபாச இணையதளங்களில் மார்பிங் செய்து வெளியிட்டு உள்ளனர்.

மேலும் எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் அதையெல்லாம் அனுப்பி வைத்துள்ளனர். இதன் காரணமாகவே நான் போலீசுக்கு சென்று உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version