Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உள் இட ஒதுக்கீட்டு விவகாரம்! எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு!

Internal reservation issue! Petition filed in the Supreme Court on behalf of Pmk protesting!

Internal reservation issue! Petition filed in the Supreme Court on behalf of Pmk protesting!

உள் இட ஒதுக்கீட்டு விவகாரம்!   எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு!

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் 26 ம் தேதி தமிழக சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் திமுக அரசு பதவிக்கு வந்தபிறகும் அந்த அரசாணை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதனிடையே வன்னிய சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதை அடுத்து அவசரம் கருதி தினந்தோறும், இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டி இருப்பதாலும் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை மாற்றப்பட்டது. அதன்படி சிறப்பு வழக்காக இதை எடுத்துக் கொண்டு தினமும் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக மதுரை ஐகோர்ட் திடீரென்று கிளை உத்தரவு பிறப்பித்தது.

வன்னிய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு தற்போது செய்துள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இட ஒதுக்கீடு அளிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்றும் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்தது குறித்து ஐகோர்ட் மதுரை கிளையில் உத்தரவு தவறானது என்றும், மதுரை கிளை உத்தரவு தமிழக அரசின் ஒட்டு மொத்த நிர்வாகமும்  சிக்கலை எதிர் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் உள் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்தது. ஐகோர்ட் மதுரை கிளையில் உத்தரவிட்ட உத்தரவுக்கு தடை விதிக்க கோரி பாமக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version