Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற பெண்களையும் பெண் குழந்தைகளையும் போற்றும் அற்புதமான பாடல் வரிகள்!

ஐநா சபையால் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது. பெண் சிசு கொலைகளை தடுப்பதற்கும், பாலின சமத்துவமின்மையை குறைக்கவும், பெண் குழந்தைகளுக்கான உரிமையை நிலை நாட்டுவதற்கும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

அத்துடன் பெண் குழந்தைகளை கௌரவிப்பதற்கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது என சொல்லப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாம் இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் வெளியிட்டோரை போற்றும் மற்றும் அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் இருக்கின்ற பாடல்கள் தொடர்பாக பார்க்கலாம்.

இந்தப் பாடல் எந்த வயது பெண்களுக்கும் ஏற்ற பாடலாக காலத்தின் போக்கில் அமைந்தது தான் அதன் வெற்றி என அமைந்துள்ளது. பெண்கள் என்றாலே தேவதைகள் தானே போராட்ட குணமும் அவர்களுடன் ஒன்றிணைந்து பிறந்தது தான்.

அவர்கள் நினைத்தால் எப்படிப்பட்ட காரியங்களிலும் வெற்றி பெறும் அளவுக்கு திறமைசாலிகள் என்பதை நாம் ஒவ்வொரு நாளும் கண்கூடாகவே சமுதாயத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.

கண்ணின் மணியே

கடந்த 1987 ஆம் வருடம் இயக்குனர் சிகரம் பாலச்சந்திரனின் கைவண்ணத்தில் சுகாசினி, எஸ் பி பாலசுப்ரமணியம், விவேக் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் மனதில் உறுதி வேண்டும் இந்த திரைப்படம் பல பெண்களின் மனதில் உறுதியை ஏற்படுத்திய திரைப்படம் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா என்ற பாடலின் ஒவ்வொரு வரியும் அநீதிகளுக்கு எதிராக பெண்களை போராடச் சொல்லும் விதத்தில் இடம்பெற்று இருக்கும் உலகமெங்கும் விடிந்த பின்னரும் உங்களின் இரவு விடியவில்லை என்ற வரிகள் இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதுமைப்பெண் என்ற திரைப்படத்தில் ரேவதி, பாண்டியன் பிரதாப் கே போத்தன் உள்ளிட்டோர் நடித்திருந்த நிலையில் 1984 ஆம் வருடம் வெளியான இந்த திரைப்படத்தில் ஒரு தென்றல் புயலாகி வருதே என்ற பாடல் பெண்களின் போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இருந்தது.

வசந்த் இயக்கத்தில் அர்ஜுன், ஜோதிகா, மீனா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2000வது ஆண்டு வெளியான திரைப்படம் ரிதம் இந்த திரைப்படத்தில் ரிதம் பெற்ற நதியே நதியே பாடல் பெண்களை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் நதிகளுக்கு ஏன் பெண்ணின் பெயர் வைக்கப்பட்டது? பெண் சக்தி எவ்வளவு பெரியது? என்பதை இந்த பாடலின் வழியே அழகாக வைரமுத்து எழுதியிருக்க உன்னி மேனன் தன் குரல் மூலமாக அதற்கு உயிர் வழங்கி இருப்பார்.

அமீர் இயக்கத்தில் ஜீவா,கஜலா, சரண்யா பொண்வண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்த திரைப்படம் ராம். இந்தத் திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியானது இதில் இடம்பெற்ற ஆராரிராரோ பாடல் தாய்மையை போற்றும் பாடல்களில் முதன்மையானதாக இருக்கிறது தாயைப் புகழ்ந்து பாடப்படும் பாடல்களுக்கு இடையில் தாய்க்கும் மகனுக்குமான உறவை விளக்கும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.

மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு சினிமா பக்கம் திரும்பிய ஜோதிகா நடித்த திரைப்படம் 36 வயதினிலே. இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற வீட்டில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் புறக்கணிப்புகளை கடந்து வாழ்க்கையில் சாதிக்க தூண்டும் ஒரு பாடலாக அமைந்தது வாடி ராசாத்தி பாடல் குறிப்பாக பெண்களின் திறமைகளை என்னதான் காலம் மாறினாலும் பூட்டி வைக்கிறார்கள் என்பதை வரிகள் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

பிரகாஷ்ராஜ் அப்பாவாகவும் திரிஷா மகளாகவும் நடித்த அபியும் நானும் திரைப்படத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. ஒரு தந்தை மகள் பாசம் எப்படி இருக்க வேண்டும் என்று தமிழில் உதாரணம் சொல்லும் படங்களில் இதற்கு தனி இடம் உண்டு. தெய்வமகள் தூங்கையிலே சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன் பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக் கொண்டேன் உள்ளிட்ட வரிகள் பெண் குழந்தைகள் மீதான அன்பை பிரதிபலிக்கும் விதமாக இருந்தது.

என்னை அறிந்தால் திரைப்படத்தில் இடம்பெற்ற உனக்கென்ன வேணும் சொல்லு பாடல் சமகாலத்தில் தந்தை மகளுக்கான அன்பை வெளிப்படுத்திய பாடல்களில் ஒன்று உலகெண்ணம் பரமபதம் விழுந்த பின் உயர்வு வரும் நினைத்தது, நினையாதது சேர்க்க போகுமே என்ற வரிகள் வாழ்க்கையின் எதார்த்தத்தை விளக்கியது.

தங்க மீன்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை பாடல் தந்தை மகள் தந்தை பறைசாற்றும் பாடல்களில் ஒன்று நா. முத்துக்குமாரின் வரிகளும், யுவன் சங்கர் ராஜாவின் இசையும் பாடலுக்கு பலம் சேர்த்து இருந்தது. குறிப்பாக அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி என பெண் குழந்தைகளை தெய்வத்திற்கு இணையாக ஒப்பீடு செய்யப்பட்டிருந்த வரிகள் எல்லோரையும் கவர்ந்தது.

மணிரத்தினம் இயக்கிய கணத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் இந்த பட்டியலில் மிக முக்கியமான ஒரு இடத்தை பிடிக்கிறது. இந்த பாடல் அப்பா, மகள் அம்மா, மகள் என இரு தரப்பிலும் படமாக்கப்பட்டு இருக்கும். பொதுவாக அம்மா, மகள் பாசப்பினைப்பை வெளிப்படுத்தும் பாடல்கள் தமிழ் சினிமாவில் குறைவு தான்.

அஜித் குமார் நடித்த விசுவாசம் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடல் மீண்டும் தந்தை மகள் அன்பை பறைசாற்றிய பாடல்களில் ஒன்றாக இருந்தது. இந்த பாடலுக்காக இசையமைப்பாளர் இமான் தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version