பிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் உருவான வரலாறு
மனிதன் தகவல்களை பரிமாறி கொள்ள மொழி அத்தியாவசியமாகிறது. ஆதி மனிதன் சகைககள் மற்றும் குறியீடுகள் மூலமாக தகவல்களை பரிமாறி கொண்டிருந்த நிலை மாறி மொழியின் மூலமாக தகவல்களை பரிமாற ஆரம்பித்தது முதல் மனித இனத்தின் நாகரிக வளர்ச்சி ஆரம்பமானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் மனித வளர்ச்சியில் மொழி என்பது இன்றியமையாத ஒன்றாக மாறி விட்டது. அதிலும் குறிப்பாக ஒவ்வொருவரும் தாங்கள் பிறந்த உடனே பேசிய தாய் மொழி மூலமாக தான் அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கிறது. ஒருவர் பல்வேறு மொழிகளில் வல்லுனராக இருந்தாலும் அவருடைய சிந்திக்கும் மொழியானது தாய் மொழியாக தான் இருக்கும்.
இந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த தாய் மொழியை சிறப்பிக்கும் வகையில் தான் உலக தாய் மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி கடைபிடிக்கபடுகிறது.
தாய்மொழி தினம் உருவான விதம்:
* 1952 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் வங்கமொழியை காக்க டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் தடையை மீறி போராட்டம் நடத்தினார்கள்.
* போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 4 மாணவர்கள் மொழிக்காக தங்களுடைய உயிரைத் தியாகம் செய்தனர்.
* இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி உலக தாய்மொழி தினமாக கடைபிடிக்க யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.
* இதனையடுத்து 2000 ஆம் முதல் பிப்ரவரி 21 ஆம் தேதியானது உலகெங்கும் வாழும் மக்களால் தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.