Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல்வர் செய்த அந்த செயல் சர்வதேச அளவில் குவியும் பாராட்டு! ஆனால்…

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு ஐந்து பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது .இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்கள்.இந்த சூழ்நிலையில், இந்த நடவடிக்கைக்கு உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுசிக் பாசு தமிழக அரசின் இந்த வரவேற்பை வரவேற்று இருக்கிறார் என்று தெரிகிறது.

இதுதொடர்பாக தன்னுடைய வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் இது சிறப்பான செய்தி தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள் அகில இந்திய கொள்கை வகுப்பிலும் இது போன்ற நபர்களின் கருத்துக்கள் இருக்கும் ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் எட்டிய உச்சத்திற்கு மறுபடியும் திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கின்றார்.

அதேபோல முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பொருளாதார ஆலோசனைக் குழுவை முதலமைச்சர் அமைத்திருப்பது மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கின்றார்.அதோடு தமிழக அரசு ஒரு பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக இருக்கிறது. இந்த குழுவில் இருக்கின்ற பொருளாதார வல்லுநர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள். இந்த குழுவை அமைத்தது மிகச்சிறந்த நடவடிக்கை இதனை நான் பாராட்டி வரவேற்கிறேன் என்று பார் சிதம்பரம் தெரிவித்து இருக்கின்றார்.

இதைப்போலவே முதலமைச்சர் ஸ்டாலின் தனக்கென்று தனி ஆலோசனை குழு ஒன்றையும் அமைத்து இருக்கின்றார். அதாவது பல முக்கிய அதிகாரிகள் அந்த குழுவில் இடம் பெற்றிருந்தார்கள் தனக்கு ஏற்படும் பல இக்கட்டான சூழ்நிலைகளில் அவர்களிடம் கருத்து கேட்பதற்காக அந்த குழு அமைக்கப்பட்டு இருந்தது.அவருடைய இந்த நடவடிக்கைக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தார்கள். ஏனென்றால் அந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் பல ஐஏஎஸ் அதிகாரிகள் மிகவும் நேர்மையானவர்கள் என்று இந்திய அளவில் பெயர் எடுத்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஒருபுறம் இந்த நடவடிக்கை அவருக்கு பாராட்டுக்களை தேடிக் இருந்தாலும் மறுபுறமோ ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சமயத்தில் செயல்பட்ட விதம், அவரின் பேச்சின் விதம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி சமூக வலைதள வாசிகள் அவரை வெகுவாக கிண்டலடித்து வருகிறார்கள். ஒரு பொது மேடையில் பேசும்போது கூட அவர் பேச்சில் தடுமாற்றம் ஏற்படும் இது எல்லோரும் அறிந்ததுதான். அதை வைத்து தான் தமிழகம் முழுவதும் அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சமயத்தில் பல்வேறு தரப்பினரும் அவரை கலாய்த்து வந்தார்கள்.

அதேபோல சுதந்திர தினம் குடியரசு தினம் உள்ளிட்ட தேதிகளை மாற்றி கூறியது போன்ற விவகாரங்களில் அவருக்கு எதிராக சமூக வலைதளங்கள் அனைவரும் கொந்தளித்ததோடு அவரை கலாய்த்து தள்ளினார்கள். ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்கு சுதந்திர தினம் கூட தெரியவில்லையா என்ற அளவிற்கு நெட்டிசன்கள் கேள்விகள் இருந்தது.

அதோடு அவர் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து அவருடைய பேச்சின் தன்மை மாறி இருக்கின்றது. அதாவது ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்த்தைக்கும், மிகப் பெரிய இடைவெளி விட்டு அவர் உரையாற்றினார் என்பது பலரும் அறிந்த தான். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சமயத்தில் பேசிய பேச்சின் விதத்திற்கும், தற்போது அவர் பேசும் பேச்சிற்கும், மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.

அதாவது பொது மேடைகளிலும் அதேபோல பொதுமக்களிடமும் பேசுவதற்கு என்று தனியாக பேச்சுப்பயிற்சி முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். என்பது இதிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிகின்றது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சமயத்தில் பல்வேறு தரப்பினரும் அவரை கலாய்த்தது போல் தற்போதும் கலாய்த்தால் அது மிகப்பெரிய சர்ச்சையாகி விடும்.

ஆகவே இப்போது பேச்சு பயிற்சி மற்றும் தனிப்பட்ட ஆலோசனை குழு, நிபுணர் குழு என்று பல குழுக்களை அமைத்து தன் அருகிலேயே வைத்துக் கொண்டு அவர்களுடைய ஆலோசனைக்கு ஏற்றவாறு ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version