Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுறா திரூப்படத்தில் நான் நடித்தது என்னுடைய தப்புதான்… நடிகை தமன்னா அவர்கள் பேட்டி…

 

சுறா திரூப்படத்தில் நான் நடித்தது என்னுடைய தப்புதான்… நடிகை தமன்னா அவர்கள் பேட்டி…

 

நடிகை தமன்னா அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் சுறா திரைப்படத்தில் நடித்தது என்னுடைய தப்புதான் எனவும் அதில் நடித்திருக்கக் கூடாது எனவும் பேசியுள்ளார்.

 

தமிழ் சினிமாவில் கேடி திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமான தமன்னா அவர்கள் அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்தார். விஜய், அஜித், சூரியா, விக்ரம், தனுஷ் என தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

நடிகை தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜீ கர்தா வெப் தொடர் மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 திரைப்படத்திலும் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். ஜெயிலர் திரைப்படத்தில் இருந்து வெளியான முதல் பாடலான காவாலா பாடலுக்கு நடிகை தமன்னா அவர்கள் நடனமாடியது ரசிகர்களை கவர்ந்தது. மேலும் இன்று வரை காவாலா பாடல் டிரெண்டிங்கில் இருந்து வருவதற்கு நடிகை தமன்னா அவர்களும் ஒரு காரணம் ஆகும். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த சுறா படத்தை பற்றி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

 

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகை தமன்னா அவர்கள் “சுறா திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த திரைப்படத்தில் நான் மிகவும் மோசமாக நடித்திருக்கிறேன். என்னுடைய வாழ்நாளில் இனிமேல் இது போன்ற கதாப் பாத்திரங்களில் நடிக்கப் போவது இல்லை என்பதை உறுதியாக சொல்கிறேன்.

 

சுறா படப்பிடிப்பின் பொழுதே எனக்கு தெரியும். இந்த கதாப்பாத்திரம் வொர்க் அவுட் ஆகாது என்று. அது மட்டுமில்லாமல் அதிக படங்களில் நமக்கே தெரியும். அந்த சில கதாப்பாத்திரங்கள் நமக்கு ஒத்துவராது என்று. இருந்தாலும் நான் நடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தேன். அது மட்டுமில்லாமல் நம்முடன் சேர்ந்து பலரின் பொருளாதார நிலைமை நாம் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் திரைப்படங்களை நம்பி இருக்கும். ஆகவே ஒப்புக்கொண்டால் நடித்தே தீர வேண்டும். அது வேலையின் ஒரு பகுதி” என்று கூறினார்.

 

Exit mobile version