Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும்? பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேட்டி!

தமிழக பள்ளிகளில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் சேதமடைந்த நிலையில் இருக்கின்ற கட்டிடங்கள் இடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ,இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதோடு சமீப காலமாக பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இது தொடர்பாகவும், கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

ஆலோசனைக்கு நன்றாக அவர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்ததாவது, பாலியல் துன்புறுத்தல்கள், பழைய கட்டிடங்கள் இடித்தல், உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்து அறிக்கை பெற்றிருக்கின்றோம். அந்த அறிக்கையின் அடிப்படையில் சுமார் 1600 பள்ளிகளில் பழைய கட்டிடங்கள் இருப்பது முதல்கட்டமாக கண்டுபிடிக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் குறித்து புகார்கள் வழங்க 14417 என்ற எண்ணெய் பள்ளி வளாகங்களில் அனைத்து பகுதிகளிலும் தெரியுமாறு வைக்க அறிவுறுத்தி உள்ளோம். மாணவரின் மனசு புகார் பெட்டியில் வைக்கப்பட்டு வருகின்றது, இவை அனைத்தும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதா? என்று கண்காணிக்கவும் ,அலுவலர்களுக்கு உத்தரவிட்டு இருக்கின்றோம் என கூறியிருக்கிறார்.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்படும், அது முடிவடைந்த பிறகு மார்ச் மாதத்தில் இரண்டாவது திருப்புதல் தேர்வு நடத்தப்படும், அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத ஆரம்பத்தில் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.

கட்டிடங்களை ஆய்வு செய்யும்போது அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்ய வலியுறுத்தி இருக்கின்றோம், எதிர்வரும் காலங்களில் திருநெல்வேலியில் நடந்ததை போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பழைய கட்டிடங்கள் இருக்கிறது என்று அனைத்து கட்டிடங்களையும் இடித்துவிட்டு மாணவர்களை அமர்ந்து படிப்பதற்கு வகுப்பறை இல்லை என்று தெரிவித்து விடக்கூடாது அதனையும் கருத்தில் கொண்டு இடிக்கும் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார்.

கல்வித் துறையில் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி தேவை என்று முதலமைச்சரிடம் கேட்டிருக்கின்றோம், கண்டிப்பாக வழங்குவார். அதனை வைத்து கட்டிடங்களை கட்டும் வேலைகளை மேற்கொள்வோம் இந்த வருடம் இதற்காக 250 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது எனக்கூறி இருக்கிறார்.

புதிய வகை நோய்த் தொற்று பாதிப்பு இருக்கின்ற சூழ்நிலையில், குழந்தைகளின் உடல்நிலை தான் எங்களுக்கு முக்கியம் வருகின்ற 3ஆம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளன, முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஏதாவது அறிவிப்பு வந்தால் மட்டுமே அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடர்பான அறிவிப்பு தள்ளி வைக்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம் அதுவரையில் இந்த தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இந்த ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் மிக விரைவில் தொடங்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Exit mobile version