நகைக் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா காப்பீட்டு திட்டம் அறிமுகம்!

0
100

 

நகைக்கடன் நிறுவனமான முத்தூட் நிதி நிறுவனத்தில் நகைக் கடன் பெறும் ஊழியர்களுக்கு கொரோனா காப்பீடு வழங்கும் திட்டம் அறிமுகம்.

இந்தியாவிலேயே மிகப்பெரிய நகை கடன் வழங்கும் முத்தூட் பைனான்ஸ் என்னும் நிதி நிறுவனம் தனது நகைக்கடன் வாடிக்கையாளர்களுக்கு,
கொரோனா காலத்தில் பலன் அளிக்கும் விதமாக கொரோனா காப்பீட்டு திட்டத்தை வழங்க கோடக் மகேந்திராஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளது.இத்திட்டத்தின் மூலமாக நகை கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லட்சம் வரை காப்பீட்டு திட்டம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அந்நிறுவனம் கூறுகின்றது.ஆனால் இந்த காப்பீட்டுத் திட்டத்தை
எம்.எஸ்.எல் எனப்படும் முத்தூட் சூப்பா் லோன் திட்டத்தின் கீழ் நகை கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அந்நிறுவனத்தின் சார்பில் கூறப்படுகின்றது.