Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ளும் வசதி அறிமுகம்! எந்த இடத்தில் தெரியுமா!

Introducing the facility to get gold coins through ATM! Do you know where!

Introducing the facility to get gold coins through ATM! Do you know where!

ஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ளும் வசதி அறிமுகம்! எந்த இடத்தில் தெரியுமா!

தற்போது உள்ள காலகட்டத்தில் வங்கி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் முறையில் தான் அனைத்து சேவையும் நடைபெறுகின்றது. அந்த வகையில் நகை துறையிலும் இது போன்ற அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் முதன் முறையாக  ஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ள முடியும்.நாம் வழக்கமாக ஏடிஎம்மில் பணம் பெறுவது போன்றே இந்த மெஷின் மூலம் 24 மணி நேரமும் தங்க நாணயம் பெற்று கொள்ள முடியும்.

இந்த ஏடிஎம்யை கோல்ட் சிக்கா என்ற நிறுவனம் மற்றும் ஓபன் கியூப் டெக்னாலஜிஸ் என்ற தொழில்நுட்ப ஸ்டார் அப் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த ஏடிஎம் ஆனது உலகின் முதல் ரியல் டைம் தங்க ஏடிஎம் மெஷின் என கூறப்படுகின்றது.இந்த ஏடிஎம்யில் மக்கள் அவரவர்களின் ஏடிஎம் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலமாக நாணயங்களை பெற்று கொள்ளலாம்.

மேலும் இந்த ஏடிஎம்யில் 1 கிராம் முதல் 100 கிராம் வரையிலும் நாணயங்களை நாம் பெற்று கொள்ளலாம்.இந்த திட்டமானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என தெரிவித்துள்ளனர்.இந்த ஏடிஎம் தற்போது ஹைதராபாத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவது  3000 மெஷின்கள் நிறுவப்படும் என தெரிவித்துள்ளனர்.

Exit mobile version