குடும்ப அரசியலில் அடுத்த வாரிசு அறிமுகம்!! திமுகவின் மாஸ்டர் பிளான்!!

0
277
Introducing the next successor in family politics!! DMK's Master Plan!!

முதலமைச்சர் மு க ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் குடும்ப அரசியலின் ஒரு கட்டமாக தற்பொழுது துணை முதலமைச்சர் ஆக உள்ள நிலையில் அவரைத் தொடர்ந்து அவருடைய மகன் இன்பநதி அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அரசு விழாக்கள் முதல் தற்போது நிகழ்ந்த ஜல்லிக்கட்டு வரை அனைத்திலும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தொடர்ந்து இவர்களது வாரிசான இன்பநிதி இடம்பெறுவது தொடர்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது. இது இவர்களுடைய குடும்ப வாரிசின் அடுத்த கட்ட நுழைவிற்கான ஆரம்பமாக அனைவர் மத்தியிலும் பார்க்கப்பட்டு வருகிறது.

1969 ஆம் ஆண்டு முதல் அமைச்சராக மு கருணாநிதி அவர்கள் பொறுப்பேற்ற நிலையில் , 5 முறை முதலமைச்சர் பதவியையும் தன்னகத்தே வைத்திருந்தவர் இவர். இவரைத் தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் பல தோல்விகளுக்குப் பின் முதல் முறையாக மு க ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து அரசியலில் ஈடுபட்ட மு க ஸ்டாலின் அவர்கள் 2018 ஆம் ஆண்டிற்கு பின் அதாவது தன்னுடைய தந்தையின் மறைவுக்குப் பின் தலைவர் பொறுப்பேற்றார்.

இவருடைய மகன் உதயநிதி அரசியலுக்கு வர ஆர்வம் இல்லை என்றும் அதில் நான் தலை காட்ட மாட்டேன் என்று கூறிய நிலையில் 2019 ஆம் ஆண்டு முதல் அரசியல் வட்டாரத்தில் நுழைய ஆரம்பித்தார்.2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி விரைவில் அமைச்சராவார் என கூறப்பட்ட நிலையில், தற்பொழுது துணை முதலமைச்சர் பதவியை வகித்து வருகிறார். இவ்வாறாக குடும்ப அரசியல் இல்லை என்று கூறும் இவர்கள் மீண்டும் மீண்டும் தங்களுடைய வாரிசுகளை அரசியலில் கொண்டு வருவதற்காக பாடுபடுவது போல் இவர்களுடைய செயலானது அமைந்துள்ளது.

இவ்வாறாகத்தான் தற்பொழுது உதயநிதி ஸ்டாலினின் மகனான இன்ப நிதி அரசு சார்ந்த விழாக்கள் மற்றும் ஜல்லிக்கட்டுகளில் முதல் அமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்ருடன் கலந்து கொள்வது இவருடைய அரசியல் வருகைக்கு அச்சாரம் இடுவது போல் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரம் பேசிக் கொள்கின்றன.