Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

’அரசுப் பள்ளிகளில் AI பாடத்திட்டம் அறிமுகம்’..!! ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே பயிற்சி..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள் அடுத்தாண்டு முதல் ஏஐ தொடர்பான பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய தொழில்நுட்ப காலகட்டத்தில் ஏஐ டெக்னாலஜி அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்டது. இந்த ஏஐ தொழில்நுட்பத்தால், பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதுஒருபுறம் இருந்தாலும், வரும் காலங்களில் இந்த தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. மனிதர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் இது அமைந்துள்ளது.

இந்நிலையில் தான், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள் அடுத்தாண்டு முதல் ஏஐ தொடர்பான பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை போரூர் ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது பேசிய அவர், ”அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் அடுத்தாண்டு முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பாடங்கள் கொண்டு வரப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இந்த பாடத்திட்டங்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியுடன் செய்யப்படுகிறது. மேலும், இதற்காக 62 பள்ளிகளில் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், ஏஐ தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் எங்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும்.

Exit mobile version