“பி.பி.எஃப்-இல் முதலீடு: மாதம் ₹91,000 வரை ஓய்வூதியம் பெறலாம்! எப்படி?”

0
90

மக்களின் நீண்டகால நிதி பாதுகாப்புக்காக வடிவமைக்கப்பட்டுள்ள பி.பி.எஃப் (Public Provident Fund) திட்டம், மிகவும் லாபகரமான முதலீட்டு திட்டமாக மாறியுள்ளது. மிகச்சிறந்த வட்டி விகிதம் மற்றும் வரிவிலக்கு போன்ற பலன்களுடன், இந்தத் திட்டம் உங்களை மாதம் ₹91,000 வரை ஓய்வூதியத்தை பெற வழிவகுக்கும். எப்படி என்று பார்க்கலாம்!

பி.பி.எஃப் திட்டத்தை எந்த இந்திய குடிமகனும் இந்திய அஞ்சலகங்களில் தொடங்கலாம்.

வட்டி விகிதம்: 7.1%

குறைந்தபட்ச முதலீடு: ₹500

அதிகபட்ச முதலீடு: ₹1.5 லட்சம்/வருடம்

லாக்-இன் காலம்: 15 ஆண்டுகள்

இந்த வட்டி விகிதத்தை இந்திய நிதியமைச்சகம் மூன்றுமாதத்திற்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்கிறது.

15 ஆண்டுகள் முடிந்ததும் முழு தொகையைத் திரும்பப் பெறலாம்.

அல்லது, 5 ஆண்டுகள் கூடுதலாக நீட்டிக்க முடியும். இந்த நீட்டிப்பில் முதலீடு செய்யாதிருந்தாலும், கணக்கில் ஏற்கனவே இருக்கும் தொகைக்கு வட்டி கிடைக்கும்.

பி.பி.எஃப்-இல் முழு பலனைப் பெற, நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் 5 வரை ₹1,50,000 முதலீடு செய்ய வேண்டும். இதனால் முழு நிதியாண்டுக்கான வட்டி உங்களுக்கு கணக்கிடப்படும்.

15 ஆண்டுகளில்:

முதலீடு தொகை: ₹22,50,000

வட்டி: ₹18,18,209

முதிர்வுத் தொகை: ₹40,68,209

5 ஆண்டுகள் நீட்டித்து, தொடர்ந்து ₹1,50,000 முதலீடு செய்தால்:

மொத்த காலம்: 20 ஆண்டுகள்

முதலீடு தொகை: ₹30,00,000

வட்டி: ₹36,58,288

முதிர்வுத் தொகை: ₹66,58,288

அதனை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்தால்:

மொத்த காலம்: 25 ஆண்டுகள்

முதலீடு தொகை: ₹37,50,000

வட்டி: ₹65,58,015

முதிர்வுத் தொகை: ₹1,03,08,015

 

30 ஆண்டுகளுக்குப் பிறகு மாத ஓய்வூதியம் ரூ.91,000!

 

பி.பி.எஃப் கணக்கை 30 ஆண்டுகளாக நீட்டி, ஒவ்வொரு ஆண்டும் ₹1,50,000 முதலீடு செய்தால்:

முதலீடு தொகை: ₹45,00,000

வட்டி: ₹1,09,50,911

முதிர்வுத் தொகை: ₹1,54,50,911

இப்போது, வாராந்திர வட்டி: ₹10,97,014

அதனால், மாதம் ₹91,418 வரை உங்கள் கணக்கில் கிடைக்கும்.