Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருமணத்திற்கு தாம்பூலத் தட்டில் தக்காளி வைத்து அழைப்பு… எப்படியெல்லாம் திங்க் பன்றாங்க பாருங்க…

திருமணத்திற்கு தாம்பூலத் தட்டில் தக்காளி வைத்து அழைப்பு… எப்படியெல்லாம் திங்க் பன்றாங்க பாருங்க…
கோவை மேட்டுப்பாளையத்தில் தாம்பூலத்தட்டில் பத்திரிக்கையுடன் தக்காளி மற்றும் இன்னும் சில காய்களை வைத்து நண்பர்களை திருமணத்திற்கு அழைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் தக்காளியின் விலை புல்லட் ரயிலின் வேகம் போல அதிகரித்து வருகின்றது. ஒரு காலத்தில் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்தது போல தற்சமயம் தக்காளியின் விலை தினமும் புதிய உச்சம் தொட்டு வருகின்றனர். தக்காளியின் விலை அதிகரிப்பதை வைத்து பலர் சமூக வைதளங்களில் தினமும் புதிது புதிதாக சில விஷயங்களை செய்து கவனம் ஈர்த்து பிரபலம் ஆகி வருகின்றனர்.
தக்காளி திருடு போகாமல் இருக்க இன்சூரன்ஸ், தக்காளியின் பாதுகாப்பிற்காக பவுன்சர்ஸ், சீர்த்தட்டில் தக்காளி, திருமணமானவர்களுக்கு தக்காளி பரிசு, ஹெல்மெட் வாங்கினால் தக்காளி இலவசம் என்று பல வித்தியாசமான சம்பவங்கள் நடந்து வருகின்றது. இதற்கு மத்தியில் மேட்டுப்பாளையத்தில் தாம்பூலத்தட்டில் தக்காளியை வைத்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி கவனம் ஈர்த்து வருகின்றது.
மேட்டுப்பாளையம் உழைப்பாளர் மார்கெட்டில் காய்கறி கடை நடத்தி வரும் குணசுந்தரி என்பவர் தனது மகளின் திருமணத்திற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்த சம்பவம் தான் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. காய்கறி வியாபாரி குணசுந்தரி அவர்கள் மகளின் திருமணத்திற்காக உறவினர்களையும் நண்பர்களையும் அழைக்கச் சென்ற பொழுது தற்சமயம் விலை அதிகமாக உள்ள தக்காளியை தாம்பூலத்தட்டால் வைத்து அதனுடன் விலை சற்று அதிகமாக இருக்கும் இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்ற காய்கறிகளையும் வைத்து திருமண பத்திரிக்கையை வைத்து மகளின் திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார். மேட்டுப்பாளையம் அண்ணாஜீராவ் என்ற.பகுதியில் வசிக்கும் மார்கெட் நண்பர்களை மகளின் திருமணத்திற்கு தக்காளி மற்றும் இன்னும் சில காய்கறிகளை வைத்து அழைத்த சம்பவம் தற்பொழுது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் போன்ற பழங்களை தாம்பூலத் தட்டில்  வைத்து திருமண பத்திரிகை கொடுத்து திருமணத்திற்கு அழைத்தது கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சியுடன் தாம்பூலத் தட்டில் பத்திரிக்கை வைத்து திருமணத்திற்கு அழைத்த காய்கறி வியாபாரி குணசுந்தரி அவர்களின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி பாராட்டுகளை பெற்று வருகின்றது.
Exit mobile version