ஈரான் அமெரிக்கா இடையே மேலும் பதற்றம்?
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துள்ளது. தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார் என தகவல் வந்துள்ளது. இந்த தாக்குதலில் அவருடன் ஈராக்கின் முக்கிய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் பதற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அமெரிக்காவை பழி தீர்ப்போம் என்று ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க ராணுவ முகாமை குறி வைத்து ஈரான் ராணுவத்தின் காத்ஸ் பிரிவு இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களின் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததாக தகவல் கிடைத்துள்ளது.