இறந்தவர்களின் படத்தை தவறுதலாக கூட இந்த திசையில் மாட்டி விடாதீர்கள்..!!

0
297

நமது வீட்டில் தாத்தாவோ, பாட்டியோ இறந்து போயி அவர்களின் திருவுருவ படங்கள் நம் வீட்டில் இருக்கும். அவ்வாறு இருக்கும் படத்திற்கு அவர்களின் நினைவு நாட்களில் அவர்களுக்கு விரதம் இருந்து அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து வழிபடுவோம். மேலும் வெள்ளி, செவ்வாய் என்றால் தூபம் காட்டி வழிபடுவாேம். இவ்வாறு அவர்களை மறவாமல் இருப்பதற்கும், அவர்களின் ஆசி நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், தோஷம் ஏற்படாமல் இருக்க இவ்வாறு செய்து வருகிறோம்.

ஆனால் ஒரு சிலர் வீடுகளில் அவர்களின் திருவுருவ படங்களை தவறுதலாக எந்த திசையில் மாட்ட வேண்டும் என தெரியாமல் காலம் காலமாக ஒரே திசையில் மாட்டி வைத்திருப்பார்கள். இறந்தவர்களின் படத்தை எங்கு மாட்டவேண்டும் என்று இந்த பதிவில் (iranthavargal padam) காண்போம்.

எந்த திசையில் வைக்க கூடாது?

இறந்தவர்களின் படத்தை கிழக்கில் வைத்து மேற்கு பார்த்தவாறு வைக்க கூடாது.

அதே போன்று தெற்கு பக்கம் வைத்து வடக்கு நோக்கி பார்த்தவாறு வைக்க கூடாது.

கட்டாயம் வீட்டின் பூஜை அறையில் கடவுளின் படத்துடன் வைக்க கூடாது.

கடவுளுடன் ஒப்பாக இறந்தவர்களின் படத்தை வைத்தால் அது நம் குடும்பத்தில் கவலை, கஷ்டங்களை ஏற்படுத்தும்.

எந்த திசையில் வைக்கலாம்

வடக்கு திசையில் மாட்டி தெற்கு நோக்கி வைத்தால் நன்மை உண்டாகும். ஏனென்றால் எம திசை தெற்கு திசையாக கருதப்படுவதால் இறந்தவர்களின் படம் தெற்கு நோக்கி இருந்தால் நன்மை.

மேலும் படிக்க: தரித்திரம் வராமல் தடுக்க கட்டாயம் இந்த நாட்களில் முடி, நகம் வெட்டாதீர்கள்..!!