Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரயிலில் ஏசி ஸ்லீப்பர் பெட்டிகளில் புதிய விதிகள்! ஐஆர்சிடிசி அறிவிப்பு!

ரயிலில் ஏசி, ஸ்லீப்பர் பெட்டிகளில் புதிய விதிகள் ஐஆர்சிடிசி அறிவிப்பு

ரயிலில் ஏசி, ஸ்லீப்பர் பெட்டிகளில் புதிய விதிகள் ஐஆர்சிடிசி அறிவிப்பு

ரயிலில் ஏசி ஸ்லீப்பர் பெட்டிகளில் புதிய விதிகள் ஐஆர்சிடிசி அறிவிப்பு! 

மக்களின் தொலைதூர பயணங்களுக்கு முதல் விருப்பமாக இருப்பது ரயில் மட்டுமே. ரயிலில் கட்டணம் குறைவாகவும், பயணம் பாதுகாப்பாகவும் இருப்பதால்  அனைத்து மக்களும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆனால் பண்டிகை காலங்களிலும், கோடை விடுமுறை காலங்களிலும் டிக்கெட் முன் பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்துவிடும். இது போன்ற நேரங்களில் மட்டுமே மக்கள் பேருந்தை யோசனை செய்கிறார்கள்.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான மற்றும் வசதியான பயணமாக இருப்பதால், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, ரயிலில் ஏசி மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளில் கொண்டு செல்லும் லக்கேஜ் பற்றிய சில புதிய விதிகளை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

ஏசி கோச்சுகளில் ஒருவர் அதிகபட்சமாக 70 கிலோ வரையில் லக்கேஜ் கொண்டு செல்லலாம்.

ஸ்லீப்பர் கோச்சுகளில் 40 கிலோ வரை உள்ள லக்கேஜ்களுக்கு கட்டணம் கிடையாது. கூடுதல் கட்டணம் செலுத்தி 80 கிலோ வரையிலான  லக்கேஜ்களை கொண்டு செல்லலாம்.

இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 35 கிலோ எடை வரையிலான உடைமைகளை எடுத்து செல்லலாம். இதிலும் கூடுதல் கட்டணம் செலுத்தி 70 கிலோ வரையில் எடுத்து வரலாம்.

மேலும், சக பயணிகளுடனோ அல்லது கைபேசியில் பேசும்போதோ சத்தமாக பேசக்கூடாது.

செல்போன்கள், ஹெட்போன்கள் இன்றி அதிக சத்தத்துடன் பாடல்களை கேட்க கூடாது.

இரவு 10 மணிக்கு மேல், இரவு விளக்குகளை தவிர வேறு எந்த விளக்கும் எரிய கூடாது.

மிடில் பெர்த் பயணிகள் மட்டும் எந்த நேரத்திலும் அதை பயன்படுத்தலாம். லோயர் பெர்த் பயணிகள் இதற்க்கு ஆட்சேபம் தெரிவிக்கக் கூடாது.

இரவு 10 மணிக்கு மேல் TTE க்கள் வந்து டிக்கெட்டுகளை பரிசோதிக்க கூடாது.

இரவு 10 மணிக்கு மேல் ஆன்லைன் உணவு சேவைகளை விநியோகிக்கக் கூடாது.

அதே வேளையில் E-Catering சேவை மூலம் முன்கூட்டியே உணவை ஆர்டர் செய்து இரவில் பெற்று கொள்ளலாம்.

ரயிலில் புகை பிடிப்பது, மது குடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்ட இந்த விதிமுறைகள் பயணிகள் மட்டுமல்லாது ரயில்வே ஊழியர்களுக்கும் பொருந்தும்.

Exit mobile version