Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாகனங்களுக்கு இன்சுரன்ஸ்! மாசு கட்டுப்பாடு சான்றிதழ் அவசியம்…  ஐஆர்டிஏ!!

வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய மாசு கட்டுப்பாடு சான்றிதழ் அவசியம் என காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் என்பது ஒரு வாகனம் வெளியேற்றும் புகையை சரிபார்த்து, வாகனத்தின் உமிழ்வு அளவுகள் தர மதிப்பீட்டிற்கு ஏற்ப இருக்கிறதா என்பதை ஆராய்ந்து வழங்கப்படுகிறது.

காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ) நேற்று வெளியிட்டுள்ள ஒரு புதிய சுற்றறிக்கையில், வாகனத்தின் காப்பீட்டைப் புதுப்பிக்கும்போது அதன் உரிமையாளர், வாகனத்திற்கு செல்லுபடியாகும் மாசு கட்டுப்பாட்டு (Pollution Under Control Certificate – PUC)  சான்றிதழை பெற்றுக் கொண்டபிறகே பாலிசியை புதிதாக கொடுக்கவும், புதுப்பிக்கவும் வேண்டும் என காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாவிட்டால், அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் வாகன காப்பீட்டை வழங்க வேண்டாம் என்று கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை காப்பீட்டு நிறுவனங்கள் முறையாக கடைபிடிக்கவில்லை.

இதனால், ஐஆர்டிஏ தற்போது பொது காப்பீட்டு நிறுவனங்களின் அனைத்து தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் நிர்வாகத் தலைவர்களுக்கு புதிய சுற்றறிக்கை ஒன்றை நேற்று அனுப்பியுள்ளது. இதில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றுவதற்கான நிலை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. மேலும் வாகனங்களுக்கு காப்பீடு வழங்குவதற்கு மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் அவசியம் பெற வேண்டும். எனத் தெரிவித்துள்ளது.

Exit mobile version