Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

IRON DEFICIENCY ANEMIA: உங்களுக்கு அதிகமா மூச்சு வாங்குகிறதா.. கட்டாயம் இரத்த சோகை அறிகு தான்!! உடனே செக் பண்ணுங்க!!

IRON DEFICIENCY ANEMIA: Are you short of breath? Check now!!

IRON DEFICIENCY ANEMIA: Are you short of breath? Check now!!

இன்று பலருக்கு இரும்புச்சத்து இரத்த சோகை ஏற்படுவது பொதுவான ஒரு பாதிப்பாக மாறிவிட்டது.உடலில் இரும்புச்சத்து குறைந்தால் இரத்த சோகை ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.பெரியவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் அதிக இரத்த இழப்பு உண்டாகும்.இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை பாதிப்பு ஏற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிகளவு இரத்தப்போக்கு ஏற்படக் கூடும்.

இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை அறிகுறிகள்:

1)அதிகப்படியான இரத்தப்போக்கு
2)மூச்சு திணறல்
3)உடல் பலவீனம்
4)வெளிர் நிற இரத்தம்
5)கல்லீரல் வீக்கம்
6)கருமையான மலம் வெளியேறுதல்
7)மலச்சிக்கல்
8)மார்பு வலி
9)வெளிர் மற்றும் மஞ்சள் நிற தோல்

இரத்தத்தில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் இரத்த சோகை உருவாகிறது.இதை தான் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை என்று அழைக்கிறோம்.பெண்களை அதிகம் பாதிக்க கூடிய நோயாக இருக்கிறது.

யாருக்கு இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை ஏற்படும்?

வயிற்றுப்புண் இருப்பவர்கள்,சைவ உணவுகள் உண்பவர்கள்,இரும்புச்சத்து இல்லாத உணவுகளை உண்பவர்கள்,அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை ஏற்படாமல் இருக்க டிப்ஸ்:

*வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் இருப்புச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கும்.

வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்:

1)நெல்லிக்காய்
2)எலுமிச்சை
3)ஆரஞ்சு

*இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

இருப்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்:

1)முருங்கை கீரை
2)பேரிச்சம் பழம்
3)அத்திப்பழம்
4)உலர் திராட்சை
5)கீரைகள்

*வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள் அடங்கிய உணவுகளை சாப்பிட வேண்டும்.

*தயிரில் கொத்தமல்லி இலை மற்றும் சீரகப் பொடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை குணமாகும்.

*வாழைப்பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை ஏற்படுவது தடுக்கப்படும்.

Exit mobile version