இந்திய மக்கள் அரிசி மற்றும் கோதுமையால் செய்யபட்ட உணவுகளை அதிகம் உண்கிறார்கள்.இந்த இரு தானியங்களிலும் ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிரம்பி இருக்கிறது.ஆனால் இதைவிட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிறு தானியங்களை யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை.
கம்பு,ராகி,தினை,சோளம் போன்ற சிறு தானியங்களில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.குறிப்பாக கம்பில் அரிசியை ஒப்பிடுகையில் எட்டு மடங்கு இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது.கம்பில் அடை,வடை,கூழ்,சோறு,லட்டு,தோசை,இட்லி,புட்டு போன்ற பல வகை உணவுகள் செய்து உண்ணப்படுகிறது.வாரத்திற்கு இருமுறை கம்மஞ்சோறு செய்து குடிக்க வேண்டும்.இரும்புச்சத்து குறைபாடு,இரத்த சோகை உள்ளவர்கள் கம்பு உணவை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் பேரிச்சம் பழம்,உலர் அத்தி,முருங்கை கீரை,உலர் திராட்சை,ஆட்டு மண்ணீரல் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது கட்டுப்படும்.முந்திரி,பாதாம்,வால்நட் போன்றவற்றில் அதிகளவு இரும்புச்சத்து காணப்படுகிறது.
பருப்பு வகைகளில் பாசிப்பருப்பு,பச்சை பயறு,கருப்பு உளுந்து போன்றவற்றில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது.விதைகளில் பூசணி,சூரிய காந்தி,ஆளி விதை போன்றவை இரும்புச்சத்து நிறைந்த பொருளாகும்.
அதேபோல் அசைவத்தில் சிக்கன் கல்லீரல் மற்றும் மட்டன் மண்ணீரலில் இரும்புச்சத்து அதிகளவு உள்ளது.இனிப்பு பிரியராக இருந்தால் உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க டார்க் சாக்லேட் சாப்பிடலாம்.