Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ராஜீவ் காந்தி அறக்கட்டளையில் முறைகேடு!மத்திய அரசின் அதிரடி உத்தரவு!

ராஜீவ் காந்தி அறக்கட்டளையில் முறைகேடு!மத்திய அரசின் அதிரடி உத்தரவு!

 

ராஜீவ் காந்தி அறக்கட்டளை நடத்தப்பட்டு வருகின்றது. அந்த அறக்கட்டளை பல்வேறு இடங்களில் இருந்து நிதி உதவி பெற்று வருகின்றனர். இந்நிலையில் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது அதனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டாங்கிய மூன்று அறகட்டளைகள் சட்ட விதிமுறை ஏதும் நடந்துள்ளதா என்று விசாரணை நடத்த மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குழு ஒன்று அமைத்தது.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் எப் சி ஆர் ஏ உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது மேலும் குழுவின் விசாரணை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது இந்த அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தி உறுப்பினராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version