அனைத்து விதமான தோஷங்களையும் போக்கும் இருக்கன்குடி மாரியம்மன்!

0
145

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வருடம் முழுவதும் நாள்தோறும் திருவிழா கோலாகலத்தை நாம் காணலாம். அம்மனை நேரில் தரிசிக்க வேண்டும் என்ற உந்துதலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருக்கன்குடிக்கு படையெடுத்தபாடியிருக்கிறார்கள்.

தீச்சட்டி எடுக்கவும், மாவிளக்கு போடவும், மொட்டை அடிக்கவும், நாள்தோறும் பக்தர்கள் வந்த வண்ணமிருக்கிறார்கள். ஆகவே எப்பொழுதும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

ஆனாலும் கூட தை மற்றும் பங்குனி ஆடி உள்ளிட்ட 3 மாதங்களில் மட்டும் இருக்கன்குடி ஊரே மக்கள் வெள்ளத்தில் மூழ்கும் விதத்தில் பக்தர்கள் அலைமோதுகிறார்கள். இந்த 3 மாதங்களில் கடைசி வெள்ளிக்கிழமையில் மாரியம்மன் அருள் பெற வரும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதவாறு இருக்கும் என்கிறார்கள்.

இந்த 3 மாதம் தான் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. இதில் ஆடி மாதம் நடைபெறும் ஆடி பிரம்மோற்சவ திருவிழா முதன்மையானது, பொதுவாக ஆடி மாதத்தை அம்மனுக்கு உகந்த மாதம் என தெரிவிப்பார்கள்.

தேவலோகத்தில் தை மாத முதல் ஆனி மாதம் வரை 4 மாதங்கள் பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையிலான காலங்களில் இரவு பொழுதாகவும், கருதப்படுகிறது.

இதனடிப்படையில் பார்த்தால் ஆடி மாதம் பகல் முடிந்து இரவு நேரம் ஆரம்பமாக காலமாகும்.

இதனை தட்சிணாயன புண்ணிய காலம் என தெரிவிப்பார்கள் இப்படிப்பட்ட புண்ணிய காலத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பிரமோற்சவ திருவிழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழாவில் மட்டுமே ஊர் நடுவில் இருக்கின்ற உற்சவ அம்மன் வெளியில் வீதி உலா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நொடிக்கு நொடி தன்னை தேடி வரும் பக்தர்களை தானாகவே தேடிச் சென்று தரிசனம் தருவது தான் இந்த விழாவின் முக்கிய அம்சமென சொல்லப்படுகிறது.

ஆடி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 3வது வெள்ளிக்கிழமையன்று கொடியேற்ற வைபவம் நடக்கும். அன்றைய தினம் காலை 5 மணியளவில் இருக்கன்குடி கிராமம் முழுவதும் முக்கியஸ்தர்கள் கோவில் தலைவாசல் முன்பு வேப்பிலை கொடி கட்டுவார்கள். இதில் நத்தத்துப்பட்டி, கே மேட்டுப்பட்டி, என் மேட்டுப்பட்டி, உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த முக்கியஸ்தர்கள் பங்கேற்று கொள்வார்கள். கடைசி வெள்ளிக்கிழமையன்று பகலில் ரிஷப வாகனத்தில் மாரியம்மன் உற்சவர் கோவிலிலிருந்து எழுந்தருள்வார், அதன்பிறகு வீதி உலா வருவார் என சொல்லப்படுகிறது.

ஆற்றில் அம்மன் உலா வரும்போது மக்கள் திரளாக நின்று வணங்குவார்கள் அதன் பிறகு மூல கோவிலை சென்றடையும் அம்மன் இரவு முழுவதும் அங்கே சர்வ அலங்காரத்துடன் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.

மறுநாள் அதிகாலை 5 மணியளவில் மூலவர் கோவிலிலிருந்து புறப்பட்டு ஊர் நடுவிலிருக்கும் உற்சவர் கோவிலை மறுபடியும் அம்மன் சென்றடைவார் என சொல்லப்படுகிறது. அப்போது பக்தர்கள் மேள தாளம் நகரா ஒலி எழுப்ப உற்சவத்தை சிறப்பு செய்வார்கள்.

ஆடி பிரம்மோற்சவத்தில் பங்கேற்றுக் கொண்டு அம்மனை தரிசனம் செய்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகமாகும்