ஆதார் அட்டையும் மக்கள் ஐடியும் ஒன்றா? இதன் அவசியம் என்ன? அமைச்சரின் விளக்கம்!

0
157

ஆதார் அட்டையும் மக்கள் ஐடியும் ஒன்றா? இதன் அவசியம் என்ன? அமைச்சரின் விளக்கம்!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது ஆதார் அட்டை என்பது ஒரு தனி மனிதனின் அடையாளமாகவே மாறி உள்ளது.ஆதார் அட்டையை,ரேஷன் கார்டு, பேங்க், பான் கார்டு, ஓட்டர் ஐடி, போன்ற அனைத்து வித தனிமனித தரவுகளுடன் இணைத்துள்ளோம்.

இந்நிலையில் தமிழகத்தில் மாநில அளவில் அதாவது ஆதார் அட்டை போன்று 10 முதல் 12 இலக்க எண்கள் கொண்ட மக்கள் ஐடி அட்டை வழங்கப்பட இருப்பதாக அன்மையில் மாநில அரசு அறிவித்தது.

மாநில அரசின் இந்த அறிவிப்பால் பலர் இதனை வரவேர்த்தனர். பலர் இது ஆதார் அட்டைக்கு போட்டியாக தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது என்றும் விமர்சித்தனர்.இந்நிலையில் மக்கள் ஐடி குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் செய்தியாளர்களின் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதவாறு:

தமிழகத்தில் வசிக்கும் அனைவரின் தரவுகளையும் ஒருங்கிணைக்க அரசு திட்டமிட்டுள்ளது.அதன்படி ஒவ்வொரு குடும்பங்களின் தரவுகளையும் சேமிக்க தமிழ்நாடு மின் ஆளுமை முடிவு செய்துள்ளது. இதில் நம்மாநில மக்களின் அனைத்து தரவுகளும் சேமிக்கப்படும். இந்த மக்கள் ஐடி அட்டை 10 முதல் 12 இலக்க எண்களை கொண்டிருப்பதோடு, ஒவ்வொருவருக்கும் தனித்துவமான அடையாள அட்டையாகவும் விளங்கும் என்றும், அதன் பிறகு தமிழக அரசின் மக்கள் ஐடி என்பது ஆதார் அட்டைக்கோ அல்லது மத்திய அரசு போன்ற யாருக்கும் போட்டியோ,பொறாமையோ கிடையாது. ஆதார் அட்டைக்கு போட்டி என்றெல்லாம் தகவல் வருகிறது. ஆனால் அதெல்லாம் உண்மை கிடையாது. அரசின்திட்டங்கள் மக்களுக்கு சரியான முறையில் கிடைப்பது அவசியம் என்பதால், குடும்ப தரவு தளம் அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.மேலும் இதற்கான பணிகள் அனைத்தும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது என்றும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார்.

ஆதார் அட்டைக்கும் மக்களை ஐடிக்கும் உள்ள வேறுபாடு:

ஆதாரில் அனைத்து மக்களுக்கும் ஆதார் எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும். ஆனால், மக்கள் ஐடியில் அடையாள அட்டை வழங்கப்படாது. அடையாள எண் மட்டுமே உருவாக்கப்படும்..

ஆதார் அட்டை என்பது சில சேவைகளுடன் இணைக்கப்படும். ஆனால் மக்கள் அட்டை தரவுகளை இரு துறைகளுக்கு இடையே ஒப்பிட்டு பார்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.

ஆதார் அட்டைக்கு கைரேகை, கண்ணின் கருவிழி போன்ற பயோமெட்ரிகை பதிவு செய்யப்படும் மற்றும் புகைப்படம் தேவைப்படும். ஆனால், மக்கள் ஐடியில் இது போன்ற பயோமெட்ரிக் தேவைப்படாது.

அரசு திட்டங்கள், வங்கிப் பயன்பாடுகள் போன்றவற்றுக்கு அடையாள ஆவணமாக ஆதாரை பயன்படுத்த முடியும். மக்கள் ஐடியை இரு துறைகளுக்கு இடையேயான தேவை மற்றும் பரிமாற்றத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஆதார் எண் சேவையை இணையதளம் வாயிலாக தனி நபர் லாகின் செய்து பார்க்க முடியும்.மக்கள் அட்டையை கணினி மூலமாக லாகின் செய்து பெற முடியாது.