Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மிகவும் ஆபத்தானவர்களை விடுதலை செய்ய போகிறதா ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் 2001 முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர,அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பிப்ரவரியில் தலிபான் தீவிரவாதிகளுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்ஸ்தான் சிறையில் பலகட்டங்களாக 4,600 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். தலிபான்கள் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த் ஒப்பந்தத்தின் பேரில் எஞ்சிய 400 பயங்கரவாதிகளை விடுதலை செய்ய ஆப்கானிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்து வந்தது. இந்த பயங்கரவாதிகள் விடுதலைக்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த 400 பயங்கரவாதிகளையும் விடுதலை செய்ய ஆப்கானிஸ்தானின் முக்கிய தலைவர்கள் அனுமதியளித்தனர். ஆனால் பயங்கரவாதிகளை விடுதலை செய்வதில் கால தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், பயங்கரவாதிகளில் சுமார் 200 பேரை ஆப்கானிஸ்தான் அரசு கடந்த திங்கள் கிழமை விடுதலை செய்துள்ளது. பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டதையடுத்து பதிலுக்கு தலிபான்கள் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையின் கமாண்டர்கள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.எஞ்சிய பயங்கரவாதிகளும் கூடிய விரைவில் விடுதலை செய்யப்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் என ஆப்கானிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exit mobile version