Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எஸ் வங்கி திவாலானதற்கு அனில் அம்பானிதான் காரணமா? ரிலையன்ஸ் குழுமத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

எஸ் வங்கி திவாலானதற்கு அனில் அம்பானிதான் காரணமா? ரிலையன்ஸ் குழுமத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

சமீபத்தில் நிதி முறைகேட்டில் சிக்கியுள்ள எஸ் வங்கியானது முறைகேடாக பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தது தெரியவந்துள்ளது.
அவ்வாறு முறைகேடாக பணம் பெற்ற நிறுவனங்களில் மிக முக்கிய நிறுவனமாக ரிலையன்ஸ் குழுமம் உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

சுமார் 12,800 கோடி ரூபாய் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எந்த வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.இதன் மூலன் எஸ் வங்கியின் நிறுவனர் 4200 கோடி ரூபாய் வரை மறைமுகமாக ஆதாயம் பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ரிலையன்ஸ் குழுமத்திற்கு விசாரனைக்கு நேரில் ஆஜராகும் படி அமலாக்கத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்நிறுவனத்தின் தலைவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி இதுநாள் வரை அமலாக்கத்துறை விசாரனைக்கு ஆஜராகாமல் உள்ளார். இன்னும் ஒரு வார காலத்திற்குள் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

மேலும் முறைகேடாக கடன் வழங்கிய எஸ் வங்கியின் நிறுவனர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்

Exit mobile version