தேர்தல் நடைபெறுவதால் பீகார் கவனிக்கப்படுகிறதா? தமிழ்நாடின் நிலை என்ன!!
2020 ஆம் ஆண்டு அதிகபட்சமாக கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரம் உரையாற்றியுள்ளார். அதன் பின் அதிக நேரம் பேசுவதை உணர்ந்த அவர் இரண்டு பக்க பட்ஜெட் தாக்கல் புறக்கணித்து உரையை முடித்துள்ளார். அச்சமயமும் தமிழ்நாட்டைப் பற்றிய எந்த கருத்தும் அவர் வெளியிடவில்லை. அதேபோல் இந்த வருடம் ஒன்னேகால் மணி நேரம் உரையாற்றியும் தமிழகத்தை பற்றி எந்த ஒரு திட்டத்தையும் வெளியிடவில்லை. இதனால் தமிழக மக்கள் தங்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், இந்த வருடம் அங்கு தேர்தல் நடக்கப்படுவதால் பீகார் கவனிக்கப்படுகிறது எனவும் கூறி வருகின்றனர்.
மேலும் மாணவர்களுக்கு தாய் மொழியிலேயே டிஜிட்டல் கல்வி வழங்கப்பட வேண்டும் என அறிவித்தியுள்ளார். பாரத் நெட் மூலம் டிஜிட்டல் கல்வி பெறும் மாணவர்களுக்கு அவரவர் தாய்மொழியில் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும் மாவட்ட தோறும் புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவ முகாம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.