Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தனுஷுக்கு வில்லனாகப்போகும் ‘கேஜிஎஃப்’ பட பிரபலம்..வெளியானது லேட்டஸ்ட் அப்டேட் !

இந்த ஆண்டில் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ‘கேஜிஎஃப்-2’ படத்தில் நடித்திருந்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறார். அந்த படத்தில் வில்லனாக மிரட்டியவர் தான் நடிகர் சஞ்சய் தத், பாலிவுட் பிரபலமான இவர் பல ரசிகர்களையும் கவர்ந்து இருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு அடுக்கடுக்காக பல பட வாய்ப்புகள் குவிந்து இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகும் ‘தளபதி 67’ படத்தில் சஞ்சய் தத் வில்லனாக ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.Sanjay Dutt on KGF: Chapter 2 success: 'Hindi film industry has forgotten the larger-than-life heroism'

இந்நிலையில் தமிழ் சினிமாவின் மற்றொரு பிரபல நடிகரான தனுஷின் படத்தில் வில்லனாக நடிக்க சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மும்மொழி திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2023ம் ஆண்டின் பாதியில் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது, தற்போது படக்குழுவினர் இப்படத்திற்கான கதாபாத்திரங்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.Sanjay Dutt as villain for Dhanush? | தனுசுக்கு வில்லனாக சஞ்சய் தத்?

தனுஷ் மற்றும் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகப்போகும் அந்த புதிய படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத்தை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் தர படக்குழு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version