இந்தியாவின் தலைநகர் ஆகின்றதா சென்னை? பரபரப்பு தகவல்!
டெல்லியில் காற்றின் தரம் மிக குறைந்து கொண்டு செல்வதால் டெல்லியை விட்டு வேறு நகரத்திற்கு செல்ல சுமார் 40% சதவிகித பொதுமக்கள் விரும்புவதாக சமீபத்தில் ஒரு சர்வே தெரிவித்துள்ளது. நாட்டின் தலைநகருக்கே இந்த கதியா? என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது
இந்த நிலையில் டெல்லி நகரம் உண்மையில் தலைநகரம் என்று அழைக்கப்படுவதற்கு தகுதியானதா? என்று பல கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது. ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து இணையதளங்களில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் பெரும்பாலானோர் தலைநகரை மாற்றலாம் என்ற கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா உள்பட ஒருசில நாடுகள் தலைநகரை மாற்ற முடிவு செய்திருப்பதாக கூறப்படும் நிலையில் இந்தியாவில் தலைநகரை மாற்றுவதாக இருந்தால் எந்த நகரை தலைநகராக தேர்வு செய்யலாம் என்ற ஒரு கருத்தும் நெட்டிசன்களிடையே நிலவி வருகிறது
இந்தியாவின் புதிய தலைநகர் குறித்த பட்டியலில் கொச்சி, பெங்களூரு, நாக்பூர், ஐதராபாத் மற்றும் சென்னை போன்ற நகரங்கள் பரிசீலிக்கப்படுகிறது. இந்தியாவின் தலைநகர் மாற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டு, அந்த தலைநகர் சென்னையாக தேர்வு செய்யப்பட்டால்.. கற்பனையாக நினைத்து பார்க்க்ககூட இனிமையாக இருக்கின்றது அல்லவா? ஆனால் இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்