Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டமால் பத்துவருட கூட்டணி முடிவுக்கு வந்தது!

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது குறைந்த இடங்கள் தரும் திமுகவை கழட்டி விட்டுவிட்டு கமல், தினகரன் ஆகியோர் உடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பற்றி காங்கிரஸ் பரிசீலனை செய்து வருகின்றது எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அனைத்து கட்சிகளுமே ஆயத்தமாகி வருகின்றனர் திமுகவின் தேர்தல் ஆலோசகரான ஐபேக் 200 க்கும் குறையாத தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றது இதற்கு ஏற்ப கூட்டணி பங்கிவிடு அமைய வேண்டும் என்று சொல்லி வருகின்றது ஆரம்பத்தில் இதை ஏற்க மறுத்த திமுக இப்போது அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கேற்றார் போல் தொகுதி பங்கீடு சம்பந்தமான ரகசிய ஆலோசனைகளை திமுக தரப்பில் செய்து வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது காங்கிரஸுக்கு 20 தொகுதிகள் வரை ஒதுக்குவதற்கு திமுக முடிவு செய்து இருக்கிறது சோனியா அல்லது ராகுல் கேட்டுக்கொண்டால் 1, 2 தொகுதிகள் அதிகமாக கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கின்றது காங்கிரசுக்கு இவ்வளவு என்றால் கூட்டணியில் இடம் பெற்று இருக்கின்றன மற்ற சிறிய கட்சிகளுக்கு அதை விட குறைவாகவே சீட்டுகள் கிடைக்கும் என்பதை சொல்ல வேண்டியது இல்லை.

சென்ற சட்டமன்றத் தேர்தலில் 41 இடங்களில் நாடாளுமன்ற தேர்தலில் 10 இடங்களில் போட்டியிட்டுவிட்டு இப்போது மிகக் குறைந்த இடங்களே வாங்குவதற்கு பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லாத நிலையில் மாவட்டத்திற்கு ஒரு தொகுதி கூட இல்லாவிட்டால் எவ்வாறு சரி வரும் என்ற குறை காங்கிரஸ் கட்சியின் இடையே மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது.

கடைசிவரை ஏதேனும் தெரிவித்து விட்டு வேறு வழியில்லாமல் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்த கட்சி தங்களை ஆளாக்க இருப்பதை உணர்ந்து கொண்ட மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் வேறு வழி முறைகளை பற்றி யோசிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் இதன் ஒரு பகுதியாக கமலின் மக்கள் நீதி மையம் மற்றும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய சிறிய கட்சிகளை இணைத்து புதிய கூட்டணியை அமைக்கும் யோசனை செய்து வந்ததாகவும் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் தெரிகின்றது கமலுடன் காங்கிரசார் நடத்திய பேச்சுவார்த்தையில் இணக்கமான முடிவுகள் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது தினகரன் தரப்பிடமும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க இருக்கிறார்கள்.

Exit mobile version