Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செம்பு பாத்திர தண்ணீர் உடலுக்கு பயனளிக்குமா? டாக்டர் சொன்ன உண்மை தகவல்!!

பண்டைய காலங்களில் இரும்பு,செம்பு,பித்தளை,மண் பாத்திரங்களின் பயன்பாடு அதிகமாக இருந்தது.ஆனால் காலப்போக்கில் இந்த பொருட்களின் பயன்பாடு குறைந்து பிளாஸ்டிக்,நான் ஸ்டிக்,எவர் சில்வர் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.

தற்பொழுது பயன்பாட்டில் உள்ள பொருட்கள் கெடுதல் தரக் கூடியவையாக இருக்கின்றன.சமைப்பதற்கு சுலபமாக உள்ளது என்றாலும் இந்த பாத்திரங்களின் பயன்பாட்டால் ஆரோக்கிய கோளாறுகள் அதிகம் ஏற்படுகிறது.

தற்பொழுது தண்ணீர் பருக அதிகளவு பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்துகின்றனர்.

பிளாஸ்டிக் உடல் நலத்திற்கு ஆபத்து என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் தற்பொழுது தான் துளிர்விட தொடங்கியிருக்கிறது.இதனால் பிளாஸ்க்,செம்பு போன்ற வாட்டர் பாட்டிலில் தண்ணீர் ஊற்றி வைத்து பலரும் பலரும் பருகுகின்றனர்.

மற்ற பாத்திரங்களை ஒப்பிடுகையில் செம்பு பாத்திரம் அதிக நன்மைகள் கொண்டவையாக உள்ளது.செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பருகினால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.

செம்பு பாத்திர நீர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.செம்பு தண்ணீர் இரத்த விருத்திக்கு உதவியாக இருக்கிறது.செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பு சிறிது நேரம் கழித்து பருகுவதால் உடல் உறுப்புகள் சீராக செயல்படும்.இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செம்பு பாத்திர தண்ணீர் பருகலாம்.

இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் அகல செம்பு பாத்திர நீரை பருகலாம்.செம்பு பாத்திர நீர் எலும்பு வலிமையை அதிகரிக்க செய்கிறது.ஆண்கள் செம்பு பாத்திர நீரை பருகி வந்தால் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.உடல் ஆரோக்கியம் மேம்பட செம்பு பாத்திர நீர் பருகலாம்.இப்படி செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பருகுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது பரவலான கருத்தாக இருக்கிறது.

ஆனால் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பருகுவதால் எந்த பயனும் கிடைக்காது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.பிரபல மருத்துவர் அருண் குமார் அவர்கள் செம்பு பாத்திர நீர் பற்றி விளக்கம் கொடுத்துள்ளார்.

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பருகினால் தான் செம்பு சத்து கிடைக்கும் என்பது இல்லை.காய்கறிகள்,கீரைகள் மற்றும் பழங்களை உட்கொண்டாலும் உடலுக்கு தேவையான செம்பு சத்து கிடைக்கும்.

அது மட்டுமின்றி நமது உடலுக்கு குறைந்த அளவு செம்பு சத்துக்களே தேவைப்படுகிறது.அப்படி இருக்கையில் இதை நம் உணவுகள் மூலமே பெற்றுக் கொள்ளலாம்.செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றுவதால் அதில் செம்பு கரைந்து வரும் என்பதற்கு சாத்திய கூறுகள் இல்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version