இந்தியாவில் ஊடுருவியதா மூன்றாவது அலை? அச்சுறுத்தும் புதிய வகை வைரஸ்!

0
177

இந்தியாவில் ஊரடங்கு மற்றும் நோய்த்தொற்றுக்கண தடுப்பூசி உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூலமாக நோய் தொற்று இரண்டாவது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சூழ்நிலையில் நாட்டின் மூன்றாவது அலை ஆரம்பித்து இருக்கிறதா என்று அச்சப்படும் அளவிற்கு உருமாற்றம் அடைந்த புதிய நோய் தொற்று வகை பரவி வருகிறது.

உலக நாடுகளில் AY.4. 2 என்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, வெளிநாடுகளிலிருந்து வருகை தருவோர் 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும் என்று கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது.

அதோடு ஆந்திர மாநிலத்தில் 7 பேர் மற்றும் தெலுங்கானாவில் 2 பேர், கேரளாவில் 4 பேர் ஜம்மு காஷ்மீர் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஐ சி எம் ஆர் தெரிவித்திருக்கிறது. புதிய வைரஸ் அச்சத்தினால் நாட்டில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா? என்ற கேள்வியும் பூதாகரமாக எழுந்து நிற்கிறது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவிக்கும்போது, புதிதாக கண்டறியப்பட்ட உருமாற்ற வைரஸ் தன்மை தொடர்பாக முழுமையாக தகவல் எதுவும் கிடைக்காததால் பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதற்கு பதிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி நோய்த் தொற்றைத் தடுப்பு வழிகாட்டு நடை முறைகளை முறையாக பின்பற்றுவதே சிறந்ததாக இருக்கும் என தெரிவித்திருக்கின்றார்.

புதிய உருமாற்றம் பெற்ற வைரஸ் தொடர்பாக ஒரு குழு ஆராய்ந்து வருகிறது ஐசி எம் ஆர் மற்றும் என் சி டி சி குழுக்கள் மாறுபாடு அடைந்த வைரஸ் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடக்க கட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த வைரஸ் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கான தெளிவான விளக்கம் எதுவும் கிடைக்கவில்லை. வேகமாக பரவும் ஆனால் உயிரிழப்பு போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று சொல்லப்படுகிறது.

ஆனாலும் மூன்றாவது அலை ஏற்படுவதை தடுப்பதற்காக பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறது மத்திய, மாநில அரசுகள் கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இந்த வைரஸ் பரவி வருவதால் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தமிழ்நாட்டிற்கும் இந்த வைரஸ் ஊடுருவி விடுமோ என்ற அச்சம் தற்சமயம் ஏற்பட்டிருக்கிறது.

இருந்தாலும் தமிழகத்தில் இந்த புதிய வகை வைரஸ் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார், பண்டிகை காலங்களில் இது போன்ற புதிய நோய் தொற்று நோய் பரவுவது சற்று பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.