Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பீட்ரூட் ஜூஸ் குடிச்சா இவ்வளோ நல்லதா? உடலில் உள்ள அனைத்து நோய்களையும் விரட்டும் அற்புத பானம்!!

#image_title

பீட்ரூட் ஜூஸ் குடிச்சா இவ்வளோ நல்லதா? உடலில் உள்ள அனைத்து நோய்களையும் விரட்டும் அற்புத பானம்!!

நம் உடலுக்கு அதிகளவு சத்துக்கள் வழங்குவதில் பீட்ரூட் கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கிழங்கு உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.இந்நிலையில் உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நபர்களுக்கு ​​​​இரத்த சோகை,மூச்சுத் திணறல்,உடல் சோர்வு,தலைவலி,பசியின்மை ஆகிய பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.இதனால் உணவில் பீட்ரூட் ஜூஸை சேர்த்து பருகுவதன் மூலம் இரும்புச்சத்து,தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை உடலுக்கு எளிதில் கிடைத்து விடுகிறது.இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அதிசய காய்கறி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* பீட்ரூட் – 1

* தேன் – தேவைக்கேற்ப

*எலுமிச்சை பழம் – 1

*இஞ்சி – 1 துண்டு

செய்முறை:-

1.பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

2.ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள பீட்ரூட் துண்டுகள்,சுவைக்கேற்ப தேன்,இஞ்சி சிறு துண்டு மற்றும் ஒரு முழு எலுமிச்சையின் சாறு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.

3.ஒரு டம்ளர் எடுத்து அவற்றை ஒரு வடிகட்டி கொண்டு நன்கு பிழிந்து கொள்ள வேண்டும்.தேவைப்பட்டால் இந்த பானத்தில் ஐஸ் கியூப் சேர்த்து குடிக்கலாம்.

இந்த பீட்ரூட் ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தோம் என்றால் இரத்த சோகை மற்றும் இரத்தம் சம்மந்தபட்ட நோய் பாதிப்புகள் விரைவில் குணமாகும்.

Exit mobile version