Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மஞ்சளை டீ போட்டு குடித்தால் இவ்வளவு நன்மையா? அதனுடன் இதையும் சேர்த்தால் ருசியோ ருசி!…

மஞ்சளை டீ போட்டு குடித்தால் இவ்வளவு நன்மையா? அதனுடன் இதையும் சேர்த்தால் ருசியோ ருசி!…

அக்காலத்திலிருந்தே பாரம்பரிய மருத்துவ நடைமுறையில் மஞ்சள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், ஆன்டிவைரல், அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மஞ்சளில் அதிக நன்மைகள் நிறைந்துள்ளது.அந்த மஞ்சள் கலந்த டீ பருவமழைக்காலத்தில் வைத்து குடித்தால் பல நன்மைகளை அளிக்கிறது.அதன்படி

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு மஞ்சள் அதில் சேர்க்கவும். தண்ணீர் பாதியாக குறையும் வரை நன்றாக சுண்ட கொதிக்க வைக்க வேண்டும்.மேலும் இஞ்சி சிறிதளவு நசுக்கி அதனுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.நன்றாக இதையும் கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வடிதாலை கொண்டு வடிகட்டி சிறிது தேனுடன் சூடாக குடிக்கலாம். அது போல மஞ்சள் ஒருநாளைக்கு ஒரு டீஸ்பூன் மட்டுமே சாப்பிட உபயோகிக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

ஹீலிங் பண்புகளை கொண்ட பண்டைய இந்திய மசாலாவாக உலகளவில் பிரபலமாக உள்ளது இந்த மஞ்சள். இதில் காணப்படும் குர்குமின் என்ற கலவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் ஃப்ரீ ரேடிக்கல் சேதங்களை தடுக்க உதவுகிறது.இந்த மஞ்சள்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் குர்குமின் டீடாக்ஸ் செய்ய உதவுகிறது. பருவமழை கால கட்டங்களில் சளி மற்றும் காய்ச்சலை தடுக்க பெரிதும் உதவுகிறது. பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்ற மூலக்கூறான லிப்போபோலிசாக்கரைடு மஞ்சளில் அடங்கிவுள்ளது.

 

கல்லீரல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது இந்த மஞ்சள்.மஞ்சள் நமது ரத்தத்தை நச்சுத்தன்மையடையச் செய்யும்.அதாவது உடலிலிருந்து உணவு நச்சுகளை வெளியேற்றும் என்சைம்களை அதிகரிக்க உதவுகிறது.எனவே வாழ்வில் நலமுடன் வாழ இந்த மஞ்சள் டீ போட்டு குடிங்க.நோயில்லா பெருவாழ்வு வாழ்க.

Exit mobile version