ஆரோக்கியத்திற்கு ஆத்து மீன் சிறந்ததா? கடல் மீன் சிறந்ததா? தெரிந்தால்.. இனி இதை தான் வாங்குவீங்க!!

0
144
Is duck fish good for health? Is sea fish the best? If you know.. just buy this!!

உலகில் உள்ள அசைவ பிரியர்கள் விரும்பி உண்ணும் அசைவங்களில் முதல் இடத்தில் இருப்பது மீன் தான்.எவ்வளவு சாப்பிட்டாலும் தெகட்டாத ஒரு அசைவ உணவும் இது தான்.மீனில் வறுவல்,குழம்பு,கிரேவி,ப்ரை என்று வகை வகையான உணவுகள் செய்து உண்ணப்படுகிறது.

மீனை உலர வைத்து கருவாடாகும் செய்து உண்ணப்படுகிறது.இதர அசைவ உணவுகளை ஒப்பிடுகையில் மீனில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது.புரதம்,ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்து காணப்படுவதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவு பட்டியலில் மீன் கண்டிப்பாக இடம்பெறும்.

மீனில் கடல் மீன்,ஆற்றுமீன் என இருவகை உண்டு.குளம்,ஏரியிலும் மீன்கள் வளருகிறது.கடல் இதில் எது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

ஆறு,ஏரி,குளம் உள்ளிட்ட இடங்களில் வாழும் மீன்கள் நீரில் உள்ள புழு,பூச்சியை உண்டு வாழ்கிறது.கடலில் வாழும் மீன்கள் பாசியை உண்டு வளர்கிறது.ஆத்து மீனைவிட கடல் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்து காணப்படுகிறது.

இதற்கு காரணம் கடல் பாசிகள் தான்.இதில் அதிகளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கிறது.இதை மீன்கள் சாப்பிடுவதால் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்திருக்கிறது.

மத்தி,சங்கரா போன்ற சிறிய வகை மீன்களில் புரதம் மற்றும் ஒமேகா கொழுப்பு அதிகளவு நிறைந்திருக்கிறது.நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஒமேகா கொழுப்பு,புரதம் தேவைப்படுவதால் இதுபோன்ற கடல் மீன்களை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் கடல் மீன்களில் அதிக வாடை வருவதால் இதை உட்கொள்ள சிலர் விரும்புவதில்லை.ஆனால் ஆத்து மீன்களை காட்டிலும் கடல் மீன்களே ஆரோக்கியத்திற்கு உகந்ததாக உள்ளது.