Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஜகவுக்கு துணை போகிறதா பேஸ்புக்?

பாஜகவுக்கு துணை போகிறதா பேஸ்புக்

பேஸ்புக்கில் வெறுப்பு வன்முறையை தூண்டும் பதிவுகள் வெளியிடப்பட்டால் அத்தகைய பதிவுகளை நீக்கப்படுவதோடு, சம்பந்தப்பட்ட நபர்களின் கணக்குகளையும் முடக்கி வைக்கும் விதிகள் ஏற்கனவே உள்ளன. ஆனால் இந்த விதிகளை பாஜகவுடன் தொடர்புடைய சில குழுக்கள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக பேஸ்புக் பயன்படுத்துவதுவதாகபுகார் எழுந்திருக்கிறது.

இந்தியாவில் தன்னுடைய வர்த்தக நலன்களை கருத்தில் கொண்டு பாஜக தொடர்புடைய குழுக்களுக்கும்,அவர்களை தொடர்புடைய தனிநபர்களுக்கும், ஃபேஸ்புக் நிறுவனம் சலுகை காட்டியதாக,பேமஸ் பத்திரிக்கையான “தீ வால் ஸ்ட்ரீட் ஜர்னல்” என்னும் பத்திரிக்கை விரிவான செய்தி கட்டுரைகளை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள்,செய்தி
தொடர்பான இந்த விவகாரத்தை, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் வலியுறுத்தியுள்ளது.

தகவல் தொழிற்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு,ஃபேஸ்புக் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கபட உள்ளதாக அதன் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு பேஸ்புக் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்ப போவதாக கூறியுள்ளது.அவ்வாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு சம்மன் அளிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஃபேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதி நாடாளுமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக பதிலளித்த பேஸ்புக்,தாங்கள் யாருக்கும் பாரபட்சமாக செயல்படவில்லை என்றும்,குறிப்பிட்ட எந்த கட்சிக்கும் பேஸ்புக்கு சாதகமாக முடிவெடுக்க வாய்ப்பில்லை என்றும்,தாங்கள் உலகம் முழுவதும் பாரபட்சமின்றி விதிகளை பின்பற்றி வருவதாகவும், அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version