Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் நடிக்க வருகிறாரா கவுண்டமணி!… அதுவும் சிவகார்த்திகேயன் கூடவா?

மீண்டும் நடிக்க வருகிறாரா கவுண்டமணி!… அதுவும் சிவகார்த்திகேயன் கூடவா?

சிவகார்த்திகேயன் நடிக்கும் புது படத்தில் கவுண்டமணி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். இந்நிலையில் ஹீரோயின் வேடத்துக்கு பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் அறிவிப்புடன் கூடிய அறிவிப்பு சமீபத்தில் வீடியோ வெளியானது. படத்துக்கு ‘மாவீரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பெயரில் ரஜினி படம் ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள படத்தின் ப்ரமோஷன் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பது உறுதியாகியுள்ளது. படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் அதில் அவர் கலந்துகொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் பரவி வருகிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் கவுண்டமணி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. சமூகவலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக கவுண்டமணி உடல்நிலை காரணமாக படங்களில் நடிப்பது இல்லை. கடைசியாக அவர் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version