Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

லியோ படத்தில் இவரும் நடிக்கிறாரா? அவரே வெளியிட்ட அறிவிப்பு!!

Is he also acting in Leo? The announcement made by him!!

Is he also acting in Leo? The announcement made by him!!

லியோ படத்தில் இவரும் நடிக்கிறாரா? அவரே வெளியிட்ட அறிவிப்பு!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, நடிகர் விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் லியோ. இந்த திரைப்படத்தில், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் என பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படத்தை பற்றி தினம் தினம் புது புது அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கிறது.

ரசிகர்களும் இந்த அப்டேட்களுக்காக ஆவலாக காத்து கொண்டு உள்ளனர். நேற்று கூட நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் இணைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. தற்போது லியோ படத்தை பற்றி ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து லியோ படத்தில் இணைந்துள்ளார்.

அவர், தனது சமுக வலைதள பக்கத்தில் லியோ படத்தின் பெயரை இணைத்துள்ளார். அதாவது அவர் இதற்கு முன் மீசைய முறுக்கு மற்றும் வீட்ல விஷேசம் போன்ற படங்களின் பெயர்களை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது அதனுடன் லியோ படத்தின் பெயரையும் இணைத்துள்ளார். இதனால் இவரும் இந்த படத்தில் நடிக்கிறார் என ரசிகர்கள் உறுதி செய்கின்றனர்.

Exit mobile version