Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடுத்த நோட்டீஸ் இவருக்கா?? அமலாக்க துறையின் சோதனை வளையத்தில் மாட்டும் செந்தில் பாலாஜி குடும்ப உறுப்பினர்கள்!!

அடுத்த நோட்டீஸ் இவருக்கா?? அமலாக்க துறையின் சோதனை வளையத்தில் மாட்டும் செந்தில் பாலாஜி குடும்ப உறுப்பினர்கள்!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மனைவிக்கும் அமலாக்க துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை தொடர்ந்து அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நிகழ்த்தி வருகின்றார்கள்.

இந்த சூழ்நிலையில் கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் மனைவி நிர்மலா பெயரில் ராம்நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்டமான பங்களா வீட்டில் இன்று பிற்பகல் 12: 30 மணியளவில் திடீரென இரண்டு வாகனங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு அளித்தனர்.

சோதனை முடிவில் இந்த பெரிய பங்களா வீடு கட்டுவது தொடர்பாக உரிய ஆவணங்கள் உடன்  செந்தில்பாலாஜி சகோதரரின் மனைவி நிர்மலா அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் கரூரில் புறவழிச்சாலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் மனைவி நிர்மலா பெயரில் புதிதாக கட்டப்பட்டு வரும் இந்த பங்களா வீடு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நிர்மலாவின் பெயரை குறிப்பிட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் ஒட்டி இருப்பது கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version