தூக்கமின்மை பிரச்சனையா? இதோ அதற்கான தீர்வு!
தற்போதுள்ள சூழலில் பெரும்பாலானவருக்கு தூக்கமின்மை ஏற்படுகிறது. இதனை எவ்வாறு சரி செய்து மிக விரைவாக தூங்கும் வழிமுறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.
நாம் அன்றாடம் செய்யக்கூடிய வேலைகளில் உள்ள மன அழுத்தம்,மன உளைச்சல் மற்றும் போதிய உணவு எடுத்துக் கொள்ளாமல் விடுவது இதன் காரணமாகவும் தூக்கமின்மை ஏற்படும்.
தற்போதுள்ள சூழலில் இரவு நேரங்களில் சரியான தூக்கமின்மை காரணமாக பிற்காலங்களில் நமக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அடுத்த நாள் வேலையை சரியாக நம்மால் செய்ய முடியாது மற்றும் கண் எரிச்சல், கண் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனவே இதனை தவிர்க்க செய்ய வேண்டியவை என்னவென்றால் நம் உறங்கக்கூடிய அறை வெளிச்சம் இல்லாதவாறு இருக்க வேண்டும்.
தொலைபேசி, டிவி ஆகியவற்றை ஆப் செய்து விட்டு எவ்வித சத்தமும் இன்றி தூங்க வேண்டும். தேவையான அளவு நம் இரவு உறங்குவதற்கு முன் சாப்பிட வேண்டும் சாப்பிடாமல் விடுவதன் காரணமாகவும் தூக்கமின்மை ஏற்படும்.
தினந்தோறும் காலையில் நடை பயிற்சி செய்ய வேண்டும்.இதை செய்வதன் காரணமாக நம் உடல் நிலை சீராகி இரவு உறங்குவதற்கு மிகவும் உதவும். புத்தகங்கள் படிப்பது அவசியம். எழுதுவது அல்லது சிறிய விளையாட்டுக்கள் ஏதாவது ஒன்றை விளையாடுவது இதான் காரணமாகும் நமக்கு எளிதில் தூக்கம் வர உதவியாக இருக்கும்.
மேல் கூறியவற்றை அனைத்தும் செய்த பிறகு தூக்கமின்மை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லதாகும்.